வாடகைக்கு குடியிருப்போரை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

By செய்திப்பிரிவு

வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி சென்னையில் அனைத்து காவல் நிலையங்களிலும் தொடங்கியுள்ளது.

சென்னையில் சமூக விரோத குற்றச் செயல்கள் நடப்பதைத் தடுக்க, வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் குறித்த விவரங்களை அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் வழங்க வேண்டும் என ஆணையர் ஜார்ஜ் அறிவித்தார். அதன்படி, அனைத்து காவல் நிலையங்களிலும் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து காவல் நிலையங்களில் வழங்கப்படுகிறது. tnpolice@gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 31-ம் தேதிக்குள் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தின் மேல் பகுதியில் வீட்டு உரிமையாளரின் விவரங்களும், அதன் கீழ் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களும் இடம் பெற வேண்டும்.

விண்ணப்பத்தில் குடியிரு ப்போரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர், முன்பு குடியிருந்த இடம், நிரந்தர முகவரியை குறிப்பிட்டு, போட்டோவும் ஒட்ட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் வீட்டு உரிமையாளரின் கையொப்பம் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை நகல், துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தால் அதன் நகல் போன்றவையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தபால் மூலமாகவும் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனைத்து காவல் நிலையங்களில் வழங்கப்படுகிறது. www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்