இந்தியாவில் ஒயிட் காலர் ஊழியர் களுக்கான முதல் தொழிற்சங்கமான கமர்சியல் எம்ப்ளாயீஸ் அசோசி யேஷன் சென்னையில் 71 ஆண்டு களுக்கு முன்பு இதே நாளில்தான் தொடங்கப்பட்டது.
சென்னை மாகாணத்தின் வரலாற்றில் மறக்க முடியாத நாள் இன்று. 71 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (26.2.1946) இந்திய தொழிற்சங்க வரலாற்றில் முதல் முறையாக அலுவல் பணி ஊழியர்கள் (ஒயிட் காலர் ஒர்க் கர்ஸ்) உரிமை போராட்டத்தில் குதித்தனர்.
இந்த பேராட்டத்தின் விளைவாக எழுத்தர், கணக்காளர்கள் உள்ளிட்ட அலுவல் பணி ஊழியர்களுக்கான முதல் தொழிற்சங்கமான கமர்சியல் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன் (சிஇஏ) உருவானது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த சில நாட்களில் இந்த தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது.
சென்னை பூக்கடை பஜார் முதல் கடற்கரை சாலை வரை நடைபெற்ற அலுவல் பணி ஊழி யர்களின் பேரணிக்கு தலைமை வகித்தவர் 22 வயது நிரம்பிய வி.சுப்பிரமணியன். இவர் அன்றைய காலகட்டத்தில் சென்னையில் பிரபலமான பாரீஸ் அன்ட் கோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஷூ பாலிஷ் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை பார்ப்ப தற்கான நற்சூழலையும், அடிப் படை வசதிகளும் இல்லை. இத னால் சுப்பிரமணியன் உட்பட பல தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 1947-ம் ஆண்டின் மெட் ராஸ் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டப்படி செய்யப் பட்ட முதல் மேல்முறையீடு வழக்கு இதுவாகும். வேலைநீக்கம் செய்யப் பட்ட அனைவரையும் மீண்டும் பணி யில் சேர்க்க நீதிமன்றம் உத்தர விட்டது. ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர்.
அதே நேரத்தில் பணியில் சேர்ந்த மறுநாள் தொழிற்சங்க நட வடிக்கைகளுக்காக பணியிலி ருந்து ராஜினாமா செய்தார் சுப்பிர மணியன். சிஇஏ மேற்கொண்ட தொழிற்சங்கத்தின் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு அன் றைய காலகட்டத்தில் மிகப்பிர பலமான ராவ் அன்ட் ரெட்டி சட்ட நிறுவனம் உதவியது. இந்த நிறுவன வழக்கறிஞர் வி.ஜி.ராவ், ஊழியர்களுக்கு பல்வேறு சட்ட அறிவுகளை புகட்டுமாறு சுப்பிரமணியனை அறிவுறுத்தினார்.
இதன் விளைவாக ஊழியர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வு ஏற் படுத்த 1956-ம் ஆண்டில் மெட்ராஸ் புக் ஏஜென்சியை சுப்பிரமணியன் தொடங்கினார். இந்நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து தொழிலாளர்கள் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்கள் அளித்த பல்வேறு தீர்ப்புகள், அரசாணைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு வருகிறது.
தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பாக வழக்குகளின் தீர்ப்புகள் அனைத்தையும் ஒன்றாக படிக்கும் நோக்கத்தில் 1960-ம் ஆண்டில் ‘லேபர் கேஸ்’ எனும் மாத இதழை சுப்பிரமணியன் தொடங்கினார். அவர் இறக்கும் வரை (7.8.2001) சட்ட இதழில் முக்கிய பங்காற்றினார்.
தொழிற்சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியனின் மகன் எஸ்.வைத்தியநாதன் தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago