“எனது கல்விச் சேவை தொடர, ஜெயலலிதா நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும்” என கொங்கு மண்டல மணல் குவாரி புள்ளி ஆறுமுகச்சாமி பேசி இருக்கிறார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகி லுள்ள காமயக் கவுண்டன்பட்டி சுபத்ரா காளியம்மன் கோயில் கும்பாபி ஷேகம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொள்வ தற்காக வருகை தந்த தமிழ்நாடு ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் கவுரவ தலைவர் ஆறுமுகச்சாமிக்கு அந்த சமூகத்தின் சார்பில் வரவேற்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பேசிய ஆறுமுகச்சாமி, “மணல் வியாபாரத்தில் வருஷத்துக்கு 250 கோடி சம்பாதிக்கின்றேன். இதில் 190 கோடியை கல்விக்காக செலவழிக்கிறேன்.
ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பேருக்கு கல்விக்காக உதவி செய்கிறேன். இதில் 15 சதவீதம் பேர்தான் நமது ஒக்கலிக சமூகத்து பிள்ளைகள்; மற்றவர்கள் எல்லாம் வேறு சமூகத்துப் பிள்ளை கள்தான். கல்விக்காக உதவி செய்வதை சந்தோஷமாகவும் மனநிறைவோடும்தான் செய் கிறேன். அதேநேரத்தில், இந்த உதவியை முதலமைச்சர் ஜெயலலிதா தயவில்தான் செய்கிறேன். இதற்காக அவருக்கு வாழ்நாள் முழுக்க நன்றி மறவாத விசுவாசியாக இருப்பேன்.
தொடர்ந்து நான் கல்விக்குச் சேவை செய்யவேண்டுமானால், நிரந்தர முதலமைச்சராக ஜெய லலிதா இருக்க வேண்டும்” என்று கூறினார்.
மணல் குவாரி விவகாரங் களில் இருந்து ஆறுமுகச்சாமி ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்த நிலையில், அவர் திடீரென முதல்வரை புகழ்ந்து பேசி இருப்பது அனைவரையும் வியக்கவைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago