விமான நிலையத்தில் விதிமீறல்?- வைகோ உட்பட 400 பேர் மீது வழக்கு

விமான நிலைய விதிமுறைகளை மதிக்காமல் பாதுகாப்பு பகுதிகளை மீறிச் சென்றதாக வைகோ உட்பட மதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு முடிந்து நேற்று முன்தினம் காலை அவர் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க ஏராளமான மதிமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். பன்னாட்டு முனையத்தில் பயணிகளை வரவேற்க வருபவர்களும் பார்வையாளர்களும் கார் நிறுத்தும் இடம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஆனால், மதிமுக தொண்டர்கள் போலீஸாரின் பாதுகாப்பு தடுப்பை மீறி வைகோவை வரவேற்கச் சென்றனர். இதனால், போலீ ஸாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்பு பகுதிக்குள் மதிமுகவினர் நுழைவதை எப்படி அனுமதித்தீர்கள் என்று விமான நிலைய உயர் அதிகாரிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் தமிழக போலீஸாரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். உள்துறை அமைச்சகத்திடமும் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து விமான நிலைய ஆணைய விதிமுறை களை மீறி செயல்பட்டதாக வைகோ, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உட்பட 400 பேர் மீது விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல் ஆய்வாளர் மாற்றம்

இதற்கிடையே, பாதுகாப்புப் பணிகளை சரியாக செய்ய வில்லை என்றுகூறி விமான நிலைய காவல் ஆய்வாளராக இருந்த மகிமைவீரன் உடனடி யாக இடமாற்றம் செய்யப் பட்டார். அவர் திருவல்லிக் கேணி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள் ளார். மயிலாப்பூர் காவல் ஆய்வாளராக இருந்த வெங்கட் குமார், விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE