2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளிடம் இருந்து திமுக விலகியே நிற்கும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்.பாலு தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவை திமுக எடுக்க 2ஜி விவகாரம் மட்டுமே காரணம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த டி.ஆர்.பாலு, "திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக-விடம் இருந்து விலகியே இருக்க ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2ஜி விவகாரத்தால் மட்டுமே காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்கவைல்லை, திமுக எழுப்பிய பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படுத்திய உணர்வுகளை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை" என்றார்.
3-வது அணியில் இணைவது குறித்து திமுக பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு திமுக தனித்தே போட்டியிடும் என டி.ஆர்.பாலு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் மெத்தனம் காட்டுவதால் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திமுக, காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago