திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நேரடி அரசிய லில் குதிப்பதற்கு அச்சாரமாக அவரது பெயரில் வழக்கறிஞர் அணி தொடங்கப் பட்டுள்ளது. அடுத்து மருத்துவர்கள் அணியும் தொடங்கப்பட உள்ளது.
உதயநிதி ஸ்டாலின். தனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அடுத்து பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். இப்போராட்டத்தின்போது உதயநிதி முன்னிலைபடுத்தப்பட்டதால் அவர் அரசியலுக்கு வருவார் என பரவலாக பேசப்பட்டது.
இந்தச் சூழலில் தமிழகத்தில் அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு முன்பு மாநிலம் முழுவதும் நற்பணி மன்றத்துக்கு ஆதரவாக புதிய அமைப்புகளை தொடங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் அவர். அதில் முதல் கட்டமாக உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் மதுரைக்கு வந்தால் வழக்கமாக தங்கும் சுற்றுச்சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர் பிரிவு தொடக்க விழா நேற்றுமுன் தினம் நடைபெற்றது. மாவட்டத்துக்கு 40 வழக்கறிஞர்கள் வீதம் மாநிலம் முழுவதிலும் இருந்து 500 வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
வழக்கறிஞர் பிரிவை தொடங்கிவைத்து திமுக எம்எல்ஏவும், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது அடிக்கடி ‘திமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது கட்சியின் அனைத்து பிரிவுகளும் உதவியாக இருக் கும். ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் உதவிக்கு வரும் ஒரே பிரிவு வழக்கறிஞர் பிரிவுதான்’ என சொல்வார். அந்த அளவுக்கு வழக்கறிஞர் அணி முக்கியமானது. இந்த அணி உதயநிதி ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.இளங்கோ பேசியதாவது: மனிதன் படத்தில் உதயநிதி வழக்கறிஞராக நடித்திருந்தார். அவரது நடிப்பு மக்கள் மத்தியில் வழக்கறிஞர்கள் மதிப்பை உயர்த்தியது. இதையடுத்தே நாங்கள் உதயநிதி ஸ்டாலின் பெயரில் வழக்கறிஞர் அணி தொடங்கியுள்ளோம். வழக்கறிஞர் அணி உதயநிதிக்கு அனைத்துத் துறைகளிலும் பக்கபலமாக இருக்கும். இந்த அணியில் 40 வயதுக்கு உட்பட்ட வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவர். மாநில, மாவட்ட நிர்வாகிகளை உதயநிதி விரைவில் அறிவிப்பார் என்றார்.
அடுத்து உதயநிதி ஸ்டாலின் மருத்துவர்கள் அணி தொடங்கப்படுகிறது. அடுத்தடுத்து பல்வேறு அணிகளை தொடங்கி நற்பணி மன்றத்தை வலுப்படுத்தி நேரடி அரசியலில் குதிக்க உதயநிதி முடிவு செய்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago