இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகங்களை விற்பதற் கும், கொல்வதற்கும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை, ஜூலை 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பசுக்கள், காளை கள், கிடாரிகள், கன்றுகள், எருமைகள், ஒட்டகங்களை சந்தைகளில் இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மாதம் 23-ம் தேதி தடை விதித்தது. இந்த உத்தரவு அரசிய லமைப்பு சட்டத்துக்கு விரோதமா னது என அறிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வ கோமதி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘மத்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960-ம் ஆண்டில், இறைச்சிக்காக விலங்குகளை விற்கவும், பலியிட வும், உண்ணவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தச் சட்டத்துக்கு விரோதமாக மத்திய அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்தியாவில் ஒரு மனிதன் கவுரவமாக உயிர் வாழ வும், தான் விரும்பியதை சாப்பிட வும் அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது.
மத்திய அரசின் உத்தரவு அரசிய லமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14, 19, 21, 25, 29 ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே மத்திய அரசின் உத்தரவை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும், அதுவரை மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’ எனவும் கோரப்பட்டு இருந்தது. இதே கோரிக்கைக்காக மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஆசிக்இலாகிபாபா என்பவரும் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவகாசம் கோரிய அரசு
இந்த மனுக்கள் மே 30-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய உள்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், தமிழக உள்துறை செயலர் ஆகி யோர் பதில் மனு தாக்கல் செய்ய வும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத் தும், மத்திய அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை அதுவரை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
16 hours ago