புதுச்சேரியிலுள்ள கிராமத்தில் வீட்டில் கழிவறை கட்டும் குடும்பத்துக்கு 4 'கபாலி' டிக்கெட் தரும் புது முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றவுடன் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அத்துடன் இதுதொடர்பான தகவல்களையும் ட்விட்டரில் கிரண்பேடி பதிவு செய்கிறார்.
இந்நிலையில் கிரண்பேடி தனது ட்விட்டரில் வியாழக்கிழமை மாலை ஒரு ட்வீட்டை பதிவிட்டார். அதில், "புதுச்சேரி கலெக்டர் கழிவறை கட்டுவோருக்கு இலவச திரைப்பட டிக்கெட் தர உள்ளது நல்ல பலன் தரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஆட்சியர் ஜவஹர் தி இந்துவிடம் கூறியதாவது:
''புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் செல்லிப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இரு நாட்கள் ஆய்வு செய்தோம். அங்கிருந்த 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிவறை இல்லாதது அறிந்தோம். அதையடுத்து வீடுகளில் கழிவறை அவசியம் என்பதை வலியுறுத்தினோம்.
வீடுகளில் கழிவறை கட்ட அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் தருவதை தெரிவித்தோம். மேலும், கழிவறை கட்டுவதை ஊக்குவிக்க புதிய முயற்சியை எடுத்தோம்.
மக்கள் தாமாகவே முன்வந்து ஜூலை 15-க்குள் கழிவறை கட்டுவதை உறுதி செய்ய விரும்பினோம். அவ்வாறு கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்துக்கு ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் 4 டிக்கெட்டுகள் தர முடிவு எடுத்துள்ளோம். திரையரங்குகளுடன் பேசி இதற்கான ஏற்பாடுகள் அடுத்து செய்வோம்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago