சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிருபிப்பதற்காக, கூவத் தூர் விடுதியில் தங்க வைக்கப் பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் கார்களில், போலீஸ் பாதுகாப்புடன் சட்டப்பேர வைக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் வெளியேறிய உடன் பராமரிப்பு பணி நடப்பதாகக் கூறி தனியார் சொகுசு விடுதி மூடப்பட் டது. இதனால் கடந்த 10 நாட்களாக பரபரப்புடன் காணப்பட்ட கூவத் தூர் பகுதியில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவதற்காக சசிகலா தரப்பினர், எம்எல்ஏக்களை கல்பாக் கம் அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த 10 நாட்களாக தங்க வைத் திருந்தனர். இதற்கிடையே, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனால், அதிமுக வின் சட்டமன்றக் குழுத் தலைவ ராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தின கரன் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, எடப்பாடி பழனிச் சாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி யமைக்க உரிமை கோரினார். கடந்த 16-ம் தேதி ஆளுநர், அவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
எனினும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என, ஆளுநர் வித்யா சாகர ராவ் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியது. இதில், பங்கேற் பதற்காக கூவத்தூர் விடுதியில் கடந்த 10 நாட்களாக தங்கவைக் கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் நேற்று காலை 8:20 மணிக்கு சட்டப்பேரவைக்கு புறப்பட்டனர். எம்எல்ஏக்கள் அனை வரும் அமைச்சர்களின் வாகனத்தில் 4 முதல் 5 நபர்களாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த வாகனங்களுக்கு முன்பும் பின்பும் போலீஸார் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால், கூவத்தூர் மற்றும் கிழக்கு கடற் கரை சாலையில் காலை முதலே பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக கூவத்தூர் விடுதியி லிருந்து காரில் புறப்பட்ட பொள் ளாச்சி ஜெயராமன், செய்தியாளர் களிடம் கூறும்போது, பன்னீர் செல்வத்தின் கனவு பலிக்காது. மீண்டும் திமுக ஆட்சியமைக்க விடமாட்டோம். ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரும் என்று தெரி வித்தார்.
விடுதி மூடல்
கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏக் கள், சட்டப் பேரவை கூட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றதை தொடர்ந்து பராமரிப்பு பணிக்காக விடுதி மூடப்படுவதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமும் ஒரு பரபரப்புடன் காணப்பட்ட விடுதி வளாகம் நேற்று முதல் அமைதியானது. மேலும், விடுதியில் தங்கியிருந்த அதிமுக வினர் மற்றும் எம்எல்ஏக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் வெளி யேறினர். இதனால், விடுதி வெறிச் சோடியது. இதையடுத்து, விடுதி நிர்வாகம் பராமரிப்பு பணிகளுக்காக விடுதி மூடப்படுவதாக அறிவித்து, அதன் முகப்பு பகுதியில் நோட்டிஸ் ஒட்டியது.
இதுகுறித்து, விடுதி நிர்வாகம் கூறியதாவது: எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கடந்த 10 நாட்களாக விடுதியில் தங்கியிருந்தனர். அவர் கள் அனைவரும் நேற்று புறப் பட்டு சென்றதை தொடர்ந்து, அறைகள் மற்றும் வளாகத்தை தூய்மை படுத்துவதற்காக விடுதி மூடப்படுவதாக அறிவித்துள்ளோம். இவ்வாறு நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago