சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் ராஜினாமாவும் இல்லை, விடுவிப்பும் இல்லை

சட்டப்பேரவைத் செயலர் ஜமாலுதீன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாரா இல்லையா என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தண்டனை விதிக்கப்பட்டதால் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகிக்கும் தகுதியை இழந்தார். இதைத் தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வென்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியை காலியிடமாக தமிழக சட்டப்பேரவை செயலகத்தினர் அறிவிக்காமல் தாமதம் செய்தனர். அரசியல் கட்சிகள் புகார் எழுப்பியபோது, தீர்ப்பின் நகல் தங்களுக்கு முறையாக அனுப்பப்படாததால் காலியிடம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடவில்லை என்று சட்டப்பேரவைச் செயலகத்தினர் விளக்கம் அளித்தனர்.

இதற்கிடையே, கடந்த நவம்பர் 8-ம் தேதி அது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் வெளியிட்டார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி ஜமாலுதீன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக திடீரென தகவல் பரவியது. ஜெயலலிதா தகுதிநீக்கம் தொடர்பான வாசகங் களை சுருக்கமாக வெளியிடாத தால் அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. அவர் ராஜினாமா செய்ததாகவும் செய்தி கள் உலவின. அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்தபடியே உள்ளன.

இது குறித்து சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்களை விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:-

பேரவைச் செயலாளர் தொடர்பான செய்தி வெளியான வாரத்தில், தனது அறையில் இருந்த சில பொருட்களை பேரவைச் செயலாளர் எடுத்து வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த யாரோ அது போன்ற தகவலை பரப்பியுள்ளனர். மேலிடத்தில் இருந்து அவரை ராஜினாமா செய்யச் சொன்ன தாக வெளியான தகவலும் உண்மையல்ல. அவர் ராஜினாமா செய்யவில்லை, விடுவிக்கப் படவும் இல்லை. இதற்கு முன்பு மாநிலங்களவை எம்.பி. செல்வ கணபதி தகுதி நீக்கம் செய்யப் பட்டபோது, வெளியிடப்பட்ட அறிவிக்கையை போன்றே இந்த அறிவிக்கையும் தயார் செய்யப்பட்டது. சட்டப்பேரவைச் செயலாளர் வழக்கம்போல் அலுவலகத்துக்கு வருகிறார். கோப்புகளைப் பார்க்கிறார். பேரவைச் செயலாளர் தொடர்பாக வெளியான தகவல் இதுவரை உண்மையில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், லாலு பிரசாத் யாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, அது தொடர்பான அறிவிக்கை யினை 6 வரிகளிலேயே மக்களவை வெளியிட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதா தகுதி நீக்கம் தொடர் பான அறிவிக்கை 4 பத்தி அளவுக்கு சற்று விரிவாக இருந்தது. செல்வகணபதி, தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது 14 நாள்களில் அறிவிக்கை வெளியானது. ஜெய லலிதா விஷயத்தில் 40 நாட் களுக்குப்பிறகு அறிவிக்கை வெளி யாகியுள்ளது. சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனின் பதவிக்காலம் கடந்த 2012-ல் முடிவடைந்தது. இருப்பினும், அவருக்கு 5 ஆண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE