ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றப்போவது யார்?- சம பலத்துடன் களம் காணும் திமுக, அதிமுக

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியைக் கைப்பற்ற அதிமுக, திமுக சம பலத்துடன் இம்முறை களம் இறங்கியுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு அந்தஸ்து பெற்ற நகராட்சி ராஜ பாளையம். ராஜபாளையம் நகர் பகுதியில் அதிமுக அசுர பலத்துடன் இருந்து வந்தது. ஆனால், ஒன்றியப் பகுதியில் திமுகவின் பலம் ஓங்கியி ருந்ததால் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த ராஜபாளையம் தொகுதியை திமுக கைப்பற்றியது.

ராஜபாளையம் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து 2011 வரை காங்கிரஸ் வசம் இருந்த நகர்மன்றத் தலைவர் பதவியை கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தன்னுடையதாக்கிக் கொண்டது. ஆனாலும், சுகாதாரக் கேடுகளால் டெங்கு காய்ச்சல் பரவியது, குடிநீர் தட்டுப்பாடு, 2011 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையும், உள்ளாட்சித் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையும் அதிமுக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இருப்பினும், மாவட்ட அம்மா பேரவை செயலராக 10 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்து வரும் செல்வசுப்பிரமணிய ராஜாவின் மனைவி தனலட்சுமி, தற்போது நகர்மன்றத் தலைவராக உள்ளார். இந்நகராட்சியில் இவரே முதல் பெண் நகர்மன்றத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த நகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தனது மனைவி தனலட்சுமியை நகர்மன்றத் தலைவராக்க முழுமூச்சாக செயலாற்றி வருகிறார் செல்வசுப்பிரமணியராஜா.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி கூறியதாவது: டெங்கு ஒழிப்பு பணியை சிறப்பாக மேற்கொண்டது, 3 ஆயிரம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதில் 600 இடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மீதி 400 கழிப்பறைகளும் கட்டப் பட்டு வருகின்றன. குப்பை இல்லா நகராட்சியாக்க அனைத்து முயற்சி களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அனைத்து தெருக்களிலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த சட்டப் பேரவையில் முதல்வர் 110 விதியின்கீழ் அறிவித்து இதற்காக ரூ. 179.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டுள்ளதால் இம்முறையும் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார். ஆனாலும், அதிமுகவின் குறைகளை எடுத்துக்கூறி கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, புது உற்சாகத்துடன் உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியினர் களம் இறங்கியுள்ளனர்.

திமுக நகர் செயலர் ராமமூர்த்தியின் மனைவியும், மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளருமான சுமதி, கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை எப்படியும் ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கியுள்ளார் ராமமூர்த்தி. அவருக்கு ஆதரவாக திமுகவினர் கடந்த 3 மாதங்களாகவே தேர்தல் பணியை முடுக்கி உள்ளனர்.

இதுகுறித்து ராமமூர்த்தி கூறியதாவது: 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கோபால்சாமி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதை நம்பி மக்களும் வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும், இத்திட்டங்களைச் செயல்படுத்த ராஜபாளையம் நகர்மன்றத் தலைவராக அதிமுக இடம்பெற வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். அதை நம்பியும் மக்கள் வாக்களித்தனர். ஆனால், இவர்கள் கூறியபோதுபோல் எதையும் செய்யவில்லை. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக இவைகளைக் கொண்டுவரும் என்று நம்பியதால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்தனர்.

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு திட்டம் தொடங்கப்பட உள்ளது. திமுகவுக்கு அதிகரித்துள்ள மக்களின் ஆதரவால் அதிக வாக்கு வித்தியா சத்தில் வெற்றிபெறுவோம் என்றார்.

இவர்களோடு அதிமுக நகரச் செயலர் பாஸ்கரன், அம்மா பேரவை நகரச் செயலர் முருகேசன் ஆகி யோரும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களை அதிமுக சார்பில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறக்க முயற்சித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்