கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் பலத்த காற்று வீசுகிறது. அலைகள் வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் உள்ளது.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 50,000-க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் ஆழம் குறைந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் நாட்டுப் படகு மற்றும் கட்டு மரங்களில் மீனவர்கள் சிலர் கடலுக்குச் சென்றனர்.
இதனிடையே, மண்டபம் ஆசாரித் தெருவைச் சார்ந்த சண்முக சுந்தர் என்ற மீனவர் அரியமான் அருகே சூறைகாற்றினால் திங்கட்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் மாயமானர்.
மீனவர் சண்முகம் சுந்தரை தேடும்பணி இரண்டாவது நாளாக மீனவர்களும், கடலோரக் காவற்படையினரும் தேடினர்.
படம்: மனோஜ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago