ஜெயலலிதா பிரச்சார பயணத் திட்டத்தில் மாற்றம்: ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரசாரம் செய்கிறார்

By செய்திப்பிரிவு

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வின் பிரசார சுற்றுப்பயணத் திட்டத் தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலை மைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, கடந்த 3-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றுமுதல் (21-3-14) முதல் 21-4-14 வரை முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் தேதி, தொகுதி, இடம் வருமாறு:-

மார்ச் 21-ம் தேதி: விருதுநகர் தொகுதி – அண்ணாமலையார் நகர், சிவகாசி- திருத்தங்கல் நெடுஞ்சாலை, திருத்தங்கல் நகரம். சிவகங்கை தொகுதி- போக்குவரத்து நகர், ஆவின் பால்பண்ணை மேல்புறம், காரைக்குடி.

23-ம் தேதி: கடலூர் தொகுதி- மஞ்சை நகர் மைதானம், கடலூர்.விழுப்புரம் (தனி) தொகுதி - ஆவின் பால்பண்ணை எதிரில், திருச்சி பைபாஸ் சாலை- விழுப்புரம் செல்லும் வழி.

25-ம் தேதி: திண்டுக்கல் தொகுதி- அங்குவிலாஸ் விளையாட்டுத் திடல், பழனிரோடு, திண்டுக்கல். தேனி தொகுதி- தேனி-ஆண்டிபட்டி ரோடு, கோவில்பட்டி ஊராட்சி, ஆண்டிபட்டி ஒன்றியம்.

27-ம் தேதி: புதுச்சேரி தொகுதி- உப்பளம் துறைமுக வளாகம், புதுச்சேரி.

28-ம் தேதி: மதுரை தொகுதி- பாண்டி கோயில் திடல், ரிங் ரோடு, மதுரை.

29-ம் தேதி: ராமநாதபுரம் தொகுதி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்.

ஏப்ரல் 1-ம் தேதி: பொள்ளாச்சி தொகுதி, சி.டி.சி. மேடு, ஆச்சிப்பட்டி ஊராட்சி, பொள்ளாச்சி. கோவை தொகுதி- வ.உ.சி. பூங்கா மைதானம், கோவை.

3-ம் தேதி: நாமக்கல் தொகுதி- கருப்பட்டிபாளையம் பிரிவு, கிரீன்பார்க் பள்ளி அருகில், நாமக்கல். சேலம் தொகுதி- போஸ் மைதானம் சேலம்.

5-ம் தேதி: தஞ்சாவூர் தொகுதி- புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் நகராட்சி மைதானம். திருச்சி தொகுதி- இடமலைப்பட்டிபுதூர் மைதானம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி.

8-ம் தேதி: அரக்கோணம் தொகுதி- அம்மூர் பேரூராட்சி, ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி. திருவள்ளூர் (தனி) தொகுதி- சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, கவரப்பாளையம், ஆவடி.

10-ம் தேதி: நீலகிரி (தனி) தொகுதி- சிறுமுகை நான்குரோடு, தேரம்பாளையம், காரமடை ஒன்றியம்.

11-ம் தேதி: திருநெல்வேலி தொகுதி- திருநெல்வேலி மாநகராட்சித் திடல்.

13-ம் தேதி: கரூர் தொகுதி- திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், கரூர். பெரம்பலூர் தொகுதி- தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறி பேரூராட்சி.

15-ம் தேதி: ஆரணி தொகுதி- ஆரணி ரோடு மைதானம், செய்யாறு, வேலூர் தொகுதி- காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்.

17-ம் தேதி: கிருஷ்ணகிரி தொகுதி- பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி. தர்மபுரி தொகுதி- தர்மபுரி பென்னாகரம் சாலை, மேம்பாலம் அருகில்.

19-ம் தேதி : மத்திய சென்னை, வடசென்னை.

21-ம் தேதி: ஆலந்தூர், தென்சென்னை ஆகிய இடங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்