மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். இதுகுறித்த நெட்டிசன் கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Bala G
நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை..
ஆனால் அதை சாப்பிடுபவர்களின் உரிமையை ஆதரிக்கிறேன்..
மாரி செல்வராஜ்
இன்று ஏதோ ஒரு நோக்கத்திற்காக தடை என்கிற வார்த்தையை ஆதரிக்கிறவர்கள், நாளை சுதந்திரமெனும் வார்த்தையையே உச்சரிக்கும் தகுதியை முற்றிலுமாக இழக்கிறார்கள்.
- மாரிசெல்வராஜ், மாட்டுக்கறி சாப்பிடுபவன்.
Arul Ezhilan
சில்லறை வணிகத்தில் மாடும் ஒரு பிரதான வியாபார பண்டமாக இருந்ததை ஒழித்து விட்டு, அந்நிய முதலீட்டை மாட்டை நோக்கி திருப்பியிருக்கிறது மோடி அரசு. உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதால் அதை கார்ப்பரேட் சந்தை மயமாக்குவதுதான் திட்டம். ஆனால் அதை நேரடியாக செய்ய முடியாது என்பதால் ரமலான் நோன்பு திறக்கும் நேரம் ஒட்டகத்திற்கும், மாட்டுக்கும் தடை கொண்டு வந்து அதை இந்து மத உணர்வோடு செய்திருக்கிறது மத்திய அரசு.
Satheesh Kumar
மாட்டிறைச்சி தடைக்கு பின் நாட்டு மாடுகளையும், விவசாயத்தையும் ஒழிக்கின்ற நோக்கம் அடங்கியிருக்கிறது.
Uma Magi
இங்க அகோரி கோஷ்டி ஒண்ணு சுத்துதே அது உங்க கண்ணுக்குத் தெரியலயா? உங்க அல்ட்ரா மாடர்ன் டிஜிட்டல் இந்தியால அம்மண சாமிகளை மொதல்ல ஒழிங்க.. ஆடு மாடையெல்லாம் அப்புறம் காப்பாத்தலாம்.
Ram Vasanth
செந்தில் : அண்ணே... இந்த பசுவை யாருண்ணே புனிதம்னு ஆக்கினாய்ங்க...?
கவுண்டமணி : காலைல நாம வளர்க்கற மாட்டுக்கு கொஞ்சமா கீரையை கொடுத்துட்டு, ஒரு லிட்டர் கோமியத்தை புடிச்சிட்டு போறாய்ங்க பாரு.. அவங்களேதான்.
வாசுகி பாஸ்கர்
வீட்டுக்கு கறி வாங்க போவேன், வீட்ல சொல்வாங்க "சண்டை கோழியா" வாங்கிட்டு வந்துட போறடான்னு. சண்டை கோழி ருசி இருக்காது.
மாடும் அப்படி தான், muscleஆ இருக்கிற சண்டை, முரட்டு, வீரியமான மாட்டையெல்லாம், வண்டி மாட்டையெல்லாம் கறிக்கு அனுப்ப மாட்டோம். பால் வற்றிப்போன மாடுதான் அடி மாடா போகும்.
Gilli Karthik
மாடு மேல இருக்கும் அக்கறை கொஞ்சம் நாடு மேலயும் இருக்கலாம். தப்பில்லை. #BeefBan
Malathi Maithri
மக்களின் உணவில் கை வைக்கும் பாசிஸ்ட்டுகளை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள்.
ஜெயம் அசோக்
மாடு வெட்ட தான் தடை, சாப்பிடுவதற்கு தடை இல்லை - பாஜக. ஹலோ, வெட்டுனா தானே சாப்பிட முடியும்.
Rajesh Magamin
மாடு இறைச்சிக்கு நாடு முழுவதும் தடை..
முதல்ல போட்டிருக்க லெதர் செருப்ப கழத்துங்க..
Sasi Kumar
ஆடு,கோழிகளை பலியிட தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது தாம்தூம், தமிழர் பண்பாடு எனக் குதித்த போலி தமிழ் தேசியவாதிகள் மாடு வெட்டத் தடை என்றவுடன் இப்போது கப்சிப் என இருப்பதற்கு காரணம் என்ன?
AV Ramesh Mba
இந்த வாரம் மாட்டு இறைச்சியை முதல் முறைய சாப்பிடுவேன். நிச்சயமாக ஃபேஸ்புக்ல லைவ் போடுவேன்!
Senthil Praksh
மாட்டுக்கு நீங்கள் புனிதத் தன்மையை கொடுத்தாலும், அவற்றை யாரும் தன் சுய லாபத்திற்காக பயன்படுத்தாமல் இல்லை. ஒரு விவசாயி மாட்டைத் தன் தொழிலுக்காக பயன்படுத்துகிறார், அதன் வயோதிக காலத்தில் அதைப் பராமரிக்க அல்லது இறந்த பின் அப்புறப்படுத்த அரசு ஏதேனும் ஏற்பாடு செய்துள்ளதா?
விவசாயிகள் கறவை நின்றுபோன மாடை வைத்து என்ன செய்வர்? மாட்டின் கறவை நின்றபிறகு அதை கறிக்காக விற்க கூடாதெனில் என்ன செய்ய? மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவின் குடிமகன் என்ற உரிமையில் கேட்கிறேன்.
உளவாளி @withkaran
தெரியாமத்தான் கேக்குறேன்.. நீங்க மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிச்சிங்களா இல்ல மாடு ஓட்டு போட்டு ஜெயிச்சிங்களா? இது மக்களுக்கான அரசா இல்ல மாடுகளுக்கானதா?
Smiley azam @azam_twitz
மாட்டு கறி உண்ணத் தடையில்லை, மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதுதான் தான் தடை- பிஜேபி நாராயணன்.
மாடு என்ன மாத்திரையா, அப்படிய முழுசா போட்டு முழுங்க!
Ezhumalai venkatesan @venaktesan
மாட்டையே வளர்க்காத ஒரு கும்பல், மாடு வளர்க்கிற பாமர மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதைத்தான் தாங்கமுடியவில்லை.
SubaVeerapandian @Suba_Vee
சந்தையில் மாடு விற்பதற்கு இத்தனை நிபந்தனைகள். ஆனால் வெளிநாடுகளுக்கு மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அரசே ஏன் மெளனம்?
மணவை. சீ.பொ.சீ @sakthivasan3331 7
நாட்டின் எத்தனையோ மக்களின் பிரச்சனைகள்
மாட்டு இறைச்சிக்கு பின்னால் மறைந்து கொண்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago