தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சிலரின் அலட்சியமான செயல்பாடுகளால் கிராமப்புறச் சாலைகள் சேதமடைந்து வருகின்றன.
கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள நகர்ப் பகுதிகளுக்குச் செல்ல வசதியாக தார் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. விளை பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்களை எடுத்துச் செல்லவும், விவசாயப் பணிக்கான இயந்திரங்கள் செல்லவும், மக்களின் போக்குவரத்து வாகனங்கள் செல்லவும் இந்தச் சாலைகள் பெரிதும் துணைபுரிகின்றன.
இந்நிலையில், விவசாயிகள் சிலர் சாலைகளின் முக்கியத்துவத்தை உணராமல், அவற்றைச் சேதப்படுத்துகின்றனர்.நெல் நடவு செய்ய டிராக்டர் மூலம் வயலில் உழவடிக்கும்போது, இரும்புச் சக்கரங்களைப் பயன்படுத்துவது விவசாயிகளின் வழக்கம். இந்தச் சக்கரங்களை ‘கேஜ் வீல்’ என்றழைப்பர். டிராக்டரின் பிரதான சக்கரங்களைக் கழற்றிவிட்டு, பலமிக்க இரும்புச் சட்டங்களால் செய்யப்பட்ட இந்த சக்கரங்களைப் பொருத்தி, வயலில் உழவுப்பணி மேற்கொள்வர்.
`இந்த சக்கரங்களின் உதவியால் சேற்றை நன்றாகக் குழப்பினால், பயிர் நடவுக்கு வயல் தயாராகி விடும். பசுந்தாள் உரத்துக்காக நிலங்களில் சணப்பை, தக்கை பூண்டு போன்ற செடிகளை விவசாயிகள் வளர்ப்பர். மழைக் காலத்தில் அந்த நிலத்தில் நெற்பயிர் நடவுக்குத் தயார் செய்வர். செடிகளை மடிய வைத்து, வயலை தயார் செய்ய இந்த கேஜ்வீல் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், இந்த கேஜ்வீல் பூட்டிய டிராக்டரை தார் சாலைகளில் ஓட்டிச் சென்றால், அந்த இடத்தின் உறுதித்தன்மை சிதைந்து விடும்.
இதையறிந்தும் ஒரு வயலில் இருந்து, அருகே உள்ள அடுத்த வயலுக்கு கேஜ்வீலுடன் கூடிய டிராக்டரை ஓட்டிச் செல்ல விவசாயிகள் தார் சாலைகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தார் சாலைகளில், அரிவாளால் வெட்டியது போன்ற சுவடுகள் ஏற்படுகின்றன. சாலைகளின் உறுதியும் குலைந்து, குறுகிய காலத்தில் அந்த சாலை சேதமடைந்து விடுகிறது. எனவே, விவசாயிகளிடம் பொறுப்புணர்வு ஏற்பட்டால்தான், தார் சாலைகள் சேதமடைவதைத் தடுக்க முடியும். அதிகாரிகளும் இதுகுறித்து கண்காணிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago