சாதியை ஒழிப்பதில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் ஒரே நோக்கம்தான்: வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா

கருத்து வேறுபாடு இருந்தாலும் மகாத்மா காந்தியும் அம்பேத்கரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக போராடினார்கள் என்று வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா பேசினார்.

இந்திய பட்டய கணக்காளர் களின் தென் இந்திய வட்டார குழு, வி.சங்கர் அய்யரின் 7வது நினைவு சொற்பொழிவை சென்னையில் சனிக்கிழமை நடத்தியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பட்டய கணக்காளர் நிறுவன அலுவல கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், காந்தி, அம்பேத்கர் மற்றும் தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டம் என்ற தலைப்பில் இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

1950களிலும், 1960 களிலும் இந்திய வரலாற்றாசிரியர்கள் அம்பேத்கரை ஒதுக்கி விட்டனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைப் பற்றி மட்டுமே பதிவு செய்தனர். ஆனால், அம்பேத் கர் இன்று இந்தியாவின் அனைத்து தலித்துகளுக்கும் தலைவராக இருக்கிறார். அவர் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேலான பிறகு தான், அவரைப் பற்றி பலர் படிக்க ஆரம்பித்துள்ளனர். இன்று அவரை தான் “ஆல் இந்தியா ஹீரோ” என்றழைக்க முடியும்.

மகாத்மா காந்திக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே போராடினார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைகள் வெவ்வேறாக இருந்தன. காந்தி சாதியை ஒழிக்க இந்து மதத்துக் குள்ளேயே தீர்வு காண வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அம்பேத்கர் இந்து மதத்துக்கு வெளியே அதற்கான தீர்வை தேடினார். காந்தியின் பொருளாதார கொள்கை, கிராமங்களை மையமாகக் கொண்டதாக இருந்தது. ஆனால், அம்பேத்கர் நகரம் சார்ந்த பொருளாதார கொள்கையை முன் வைத்தார். நேருவை போல, அம்பேத்கர் அரசு அதிகாரங்கள் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனால், காந்தி தனி நபர் ஒழுங்குமுறையும், சுய ஊக்குவிப்பையும் நம்பினார். காந்தியையும் அம்பேத்கரையும் எதிரிகளாக பாவிப்பது, சமூக சீர் திருத்த இயக்கங்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்க ளவை உறுப்பினரும் பட்டய கணக் காளர் வி.சங்கர் அய்யரின் மூத்த மகனுமான மணி சங்கர் அய்யர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE