மதுரை மாவட்டத்தில் மயில்களின் வாழ்விடங்கள் சுருங்குவதால் அவற்றின் எண்ணிக்கை குறை கிறது. குறைந்தபட்சம் திருப்பரங் குன்றத்திலாவது மயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களிலும் மயில்கள் பரவலாக காணப்படுகின்றன. மதுரை மாவட் டத்தில் மயில்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளன. இங்கு பச்சை, நீலம் மற்றும் அபூர்வ வகை வெள்ளை நிற மயில்கள் உள்ளன. தமிழகத்தில் திருப்பரங் குன்றம் மலைப்பகுதி உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே வெள்ளை நிற மயில்கள் உள்ளன.
திருப்பரங்குன்றத்தில் சுப்பிர மணிய சுவாமி கோயில் அருகே உள்ள வனப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மயில்கள் ஆரம்ப காலத் தில் இருந்தன. தமிழகத்தில் திரு வண்ணாமலை மற்றும் இப்பகுதி யில் மட்டுமே திறந்தவெளியில் மயில்கள் உள்ளன. மயில் தேசிய பறவை என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் விவசாய பயிர்களுக்கு தொந்தரவாக இருப் பதாகக் கூறி விஷம் வைத்தும், மின்வேலியில் சிக்கியும் கொல் லப்படுகின்றன. சில இடங்களில் நாய்கள் தாக்கி இறக்கின்றன. அதனால், மாவட்டத்தில் மயில்கள் எண்ணிக்கை சத்தமில்லா மல் குறைவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் வனவிலங்கு ஆர்வலர் இளமுருகன் கூறியது:
மயில்கள், வன உயிரின பாது காப்புச் சட்டம் 1972-ன் படி அட்ட வணைக்குட்பட்ட விலங்குகள் பட்டி யலில் இடம்பெற்றுள்ளன. எனவே இவற்றை பாதுகாக்க வேண்டியது வனத்துறை கடமை. மற்ற வன விலங்குகள், பறவைகள்போல் மயில்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படாததால் அவற்றின் எண் ணிக்கை குறைவதும், அவற்றின் சரியான எண்ணிக்கையும் வனத் துறைக்கு தெரியவில்லை.
கடந்த காலத்தில் திருப்பரங் குன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட நீல நிற மயில்கள் இருந்தன. 5-க்கும் மேற்பட்ட வெள்ளை நிற மயில்கள் இருந்தன. தற்போது வெள்ளை நிற மயில்களைப் பார்த்தே பல ஆண்டாகிவிட்டது. ஏராளமான மயில்கள் இடம்பெயர்ந்து சென்று விட்டன. மயில்களைப் பாதுகாக்க மத்திய அரசு மற்றும் மாவட்ட வனத்துறைக்கு மனு அளித்தோம். அதன்பிறகு மதுரை மாவட்ட வனத்துறை, மற்ற துறைகளுடன் சேர்ந்து மயில்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்து இருந்தது.
ஆனால், கோயில் நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என அதற் கான நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பை தட்டிக்கழித்து வருகிறது. குறைந்தபட்சம் இங்குள்ள மயில்களைக் காப்பாற்ற வாவது இப்பகுதியை பாது காக்கப்பட்ட பகுதியாக அறி விக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். பல்லுயிர் பெருக்க பாது காப்பு மற்றும் பசுமைத் திட்டத் தின் கீழ், மயில்களின் வாழ்விடங் களை மேம்படுத்த வேண்டும். மயில் கள் அதிகம் வந்து செல்லும் இப் பகுதியில் சிமெண்ட் தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, காயமடையும் மயில்களை மீட்டு பராமரிக்க சோழவந்தானில் மீட்பு மையம் உள்ளது. மயிலுக்கு ஆபத்துகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறோம். மயில் களுக்கென்று பாதுகாப்பு பகுதி யாக எந்த இடத்தையும் குறிப்பிட்டு அறிவிக்க இயலாது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago