டிசம்பரில் அதிமுக பொதுக்குழு கூடுகிறது: ஜெயலலிதா பங்கேற்கத் திட்டம்

டிசம்பர் மாதம் அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி, பொதுச் செயலா ளர் ஜெயலலிதா பங்கேற்றுப் பேச ஏற்பாடுகள் நடந்து வருகின் றன. அதற்குள் அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரிக்க அதிமுக தலைமை திட்ட மிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வர் பதவியிலி ருந்து தகுதியிழப்பு செய்யப்பட்ட நிலையில், அவர் கட்சியை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தனது இல்லத்தில் இருந்தவாறே முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உரிய ஆலோ சனைகளை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளி டையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே, கட்சியில் பொறுப்புகளை பகிர்ந்து வழங்கும் வகையில், தற்போதுள்ள 52 மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளைப் பிரிக்கவும் உத்தேசத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டச் செயலாளர் கள், ஒன்றியச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட் களும், அதிமுக தலைமை அலுவல கத்தில் மாநகராட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் தனித்தனியே குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர்கள் அழைக் கப்பட்டு ஆலோசனை நடந்தது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திய லிங்கம், எடப்பாடி பழனிச் சாமி உள்ளிட்டோர் மாவட்டச் செய லாளர்களின் கருத்துகளை பதிவு செய்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை அளித்துள்ள தாகக் கூறப் படுகிறது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சியில் ஐந்து சட்டமன்றத் தொகுதி களுக்கு ஒரு மாவட்டம் எனப் பிரிக் கலாம் என்ற உத்தேசத் திட்டம் உள்ளது. இதன்படி, மொத்தம் 45 அல்லது 47 மாவட்டங்கள் உருவாக்க முடியும். இதுகுறித்து நடத்திய ஆலோசனையில் மாவட் டங்களைப் பிரிக்கும் திட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள மாவட்டங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பிரித்தால், மாவட்ட எண்ணிக்கை குறையும் என்றும், அதனால் பிரச்சி னைகள் அதிகரிக்கும் என்றும் நிர்வா கிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, முதலில் மாவட்டங் களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்காக அருக ருகில் இருக்கும் மாவட்ட நிர்வாகிக ளின் கருத்துகள் கேட்கப்படுகின் றன. டிசம்பர் இறுதிக்குள் உறுப்பி னர்கள் சேர்ப்பு மற்றும் வார்டு மற்றும் வட்டச் செயலாளர்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்கவும், பின்னர் படிப்படியாக நகரம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட தேர்தல் களை நடத்தி முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்தப் பணிகளை விரைவில் முடித்து டிசம்பரில் பொதுக் குழுவைக் கூட்ட தலைமை திட்ட மிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் நீதிமன்ற அனுமதியுடன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் நீட்டிக்கப்பட்ட தும், டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சி யிலும் ஜெயலலிதா பங்கேற்க வேண்டுமென்று, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை வைத் துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைமை அலுவலகத்தில் போராட்டம்

அதிமுக உட்கட்சியில் ஏற்பட்ட பிரச்சினையால், ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சனிக்கிழமை (இன்று) உண்ணா விரதப் போராட்டம் நடத்தப் போவதாக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிளைக் கழகச் செயலாளர் ஏ.ஜெயராமன் அறிவித்துள்ளார். இவர் தலைமைக் கழகத்தில் அளித்த மனுவில், திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படு வதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE