முதியோருக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 12% முதியோர் உள்ள னர். மருத்துவ வசதிகள் வளர்ந் துள்ள நிலையில், மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது. தமி ழகத்தில் வாழ்நாள் வயது சராசரி யாக 68 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சர்க்கரை நோய், மூட்டு வலி போன்றவற்றுக்கு தொடர் சிகிச்சை பெறுவோரின் எண் ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்காக அடிக்கடி மருத்துவ மனைக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனர் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில், மூத்த குடி மக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங் கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் மூத்த குடிமக்கள் இலவச மாக பயணம் செய்யும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கடந்த ஜூலை வரை மொத்தம் 2,54,622 முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான அறிவிப்பு வரும் 29-ம் தேதி சட்டப்பேரவை யில் தாக்கலாகும் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் இடம்பெறுமா என்றும் எதிர்பார்க் கின்றனர்.
இது தொடர்பாக முதியோர் அமைப்பு செயலாளர் வி.ராமாராவ் கூறியதாவது:
முதல்வர் அறிவித்துள்ள முதி யோருக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே முதியோரின் முக்கிய கோரிக்கை யாக இருக்கிறது. இதை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மேலும், தற்போது மாதம் ஒன் றுக்கு 10 டோக்கன்தான் வழங்கப் படுகின்றன. இது போதுமானதாக இல்லை. தற்போதுள்ள நிலையில், ஒரே பேருந்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றுவர முடியாது. பல்வேறு இடங்களுக்கு மாறி, மாறித்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதி யோருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி அதன் மூலம் தடையில்லாமல் பயணம் செய்ய வழி வகை செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பை இந்த சட்டப்பேரவை கூட்டத்திலேயே அறிவித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இலவச பஸ் டோக்கனை அதிகரிக்க வேண்டும், ஒரு டோக் கனை நாள் முழுவதும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் இருந்து வந்துள்ளன. இந்த கோரிக்கைகள் குறித்து தமி ழக அரசிடம் தெரிவித்துள்ளோம். இருப்பினும் இறுதி முடிவை அரசுதான் எடுத்து அறிவிக்கும்’’ என்றனர்.
இலவச பஸ் டோக்கனை அதிகரிக்க வேண்டும், ஒரு டோக்கனை நாள் முழுவதும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் இருந்து வந்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago