இருபது ஆண்டுகளாக மாணவர் களுக்கு கல்வியுடன் கூடவே சுற்றுச் சூழலையும் போதித்து வருகிறார் பள்ளி தலைமை ஆசிரியையான கண்ணகி பிரபாகரன். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர் வைப் பெற்றுள்ளனர். சுற்றுச்சூழ லைப் பாதுகாக்க இவர் மேற் கொண்டுவரும் அயராத பணியைப் பாராட்டி தமிழக அரசு இந்த ஆண்டுக்கான கர்மவீரர் காமராஜர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சென்னை, தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாடல் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை யாக பணியாற்றி வரும் கண்ணகி பிரபாகரன், கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தான் ஆற்றிவரும் பணிகள் குறித்த அனுபவங்களைப் பற்றி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘நான் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தேன். இந்தியாவின் அரிசிக் கிண்ணம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த தால் இளம்வயதிலேயே அதி காலையில் எழுவது, வீட்டை சுத்த மாகப் பராமரிப்பது, இயற்கை வழிபாடு, மரங்களை வளர்த்தல் உள்ளிட்டவற்றை எனது பெற்றோ ரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரியில் விலங்கியல் பாடத் தைத் தேர்வு செய்தேன். அப் போதே இயற்கை மீது இருந்த ஆர்வம் காரணமாக முதன்மைப் பாடமாக தாவரவியலைத் தேர்வு செய்து படித்தேன். பின்னர் அண் ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் கல்விப் பாடத்தை தேர்வு செய்து படித்தேன்.
1988-ம் ஆண்டு பள்ளியில் உயிரியல் பாடப் பிரிவு ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன்.
அப்போதே மாணவர்கள் மன தில் சுற்றுச்சூழல் குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானித்தேன். இதன்மூலம், அவர்கள் குடும்பத்தினரிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற் படுத்த முடியும் என நம்பினேன். இதற்காக, பள்ளியில் 2000-ம் ஆண்டில் ‘ஈகோ கிளப்’ ஒன் றைத் தொடங்கினேன். அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நான், சுற்றுச்சூழல் குறித்து பள்ளி மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறேன். இதன் மூலம், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். குறிப்பாக, குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகி றேன். இதற்காக பல்வேறு அமைப்பு கள் எனக்கு விருது வழங்கியுள்ளன.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசின் அறிவியல் சங்க கூட்டமைப்பு, சி.பி.ராமசாமி சுற்றுச்சூழல் கல்வி மையம், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளு டன் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். மேலும், தமிழக அரசு தயாரித்த சுற்றுச்சூழல் கல்வி குறித்த புத்த கத்தின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளேன்.
தற்போது நான் திடக்கழிவு மேலாண்மையைப் பயன்படுத்தி எனது பள்ளியில் மாடித் தோட்டம், மூலிகைத் தோட்டம் மற்றும் சமை யலறைத் தோட்டம் ஆகியவற்றை அமைத்து செடிகளை வளர்த்து வருகிறேன். இதற்காக, ‘சுற்றுச் சூழல் போராளிகள்’ என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து அவர்கள் மூலம் இந்தத் தோட்டங்களைப் பராமரித்து வருகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச் சூழல் குறித்து தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருவதைப் பாராட்டி தமிழக அரசின் சுற்றுச் சூழல் துறை இந்த ஆண்டுக்கான கர்மவீரர் காமராஜர் விருது வழங்கி யுள்ளது.
இந்த விருது கிடைத்திருப் பதன் மூலம் சுற்றுச்சூழல் குறித்து மேலும் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago