முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் சட்டப்பேரவையில் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் இதயங்களைவிட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஜெயலலிதா எங்களுக்கு இறைவன் கொடுத்த இன்னொரு தாய் என்று தமிழக மக்கள் எல்லோரும் அன்று மனம் நிறைந்து வாழ்த்தினார்கள். இன்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் சிந்தனை, செயல் எல்லாமே தமிழர்கள்தான்..., தாய்மார்கள்தான்...,
தமிழ்நாட்டை இந்தியாவின் முதன் மாநிலமாக ஆக்குவதற்காக ஓய்வில்லாமல் உழைத்து உயர்த்திக் காட்டியவர் ஜெயலலிதா. 1991-ஆம் ஆண்டிலிருந்து ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுதெல்லாம், அவர் தமிழக மக்களுக்காக வழங்கிய சாதனைத் திட்டங்கள் ஏராளம்.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு தொட்டில் குழந்தை திட்டம்.மழைநீர் சேகரிப்புத் திட்டம் இவை என்றுமே மக்கள் மனங்களை விட்டு மறையாத திட்டங்கள்.விலையில்லா 20 கிலோ அரிசி, தாலிக்குத் தங்கம்,கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் உயர, கறவை மாடுகள், ஆடுகள். இவை ஏழை, எளியவர்களின் இதயங்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய திட்டங்கள்.
வருங்கால மன்னர்களாகிய மாணவ-மாணவிகளுக்கு அம்மா அவர்கள் வாரி, வாரி வழங்கிய திட்டங்களால் வாழ்த்திக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள் கோடான கோடி, தண்ணீரில் மிதந்து, கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த மீனவர்களின் நிம்மதியை மீட்டுக் கொடுத்தவர். மீன்பிடி தடைக்காலங்களில் அள்ளிக் கொடுத்தவர். காவேரிப் பிரச்சினையில் வரலாற்றுத் தீர்ப்பை பெற்றுத் தந்தவர்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தொடர்ந்து வாதாடிப் போராடி, அணையின் நீர்மட்டத்தை உயர வைத்து, தென்மாவட்ட விவசாயிகளின் வேதனையைத் தீர்த்தவர்.இலங்கையிலே நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் இனம் பாதுகாப்பாக வாழ்வதற்காகப் பாடுபட்டவர்.
அதற்காக சட்டமன்றத்திலே வரலாற்றுத் தீர்மானங்களைப் போட்டவர். புரட்சித் தலைவரின் லட்சியங்களை, கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, ஏழை, எளியோரின் வேதனைகளைத் துடைத்து, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா.
இஸ்லாமிய மக்களின் புனிதமான ரமலான் மாதத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வாசல்களுக்கும், நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு அரிசி வழங்க ஆணையிட்டவர் ஜெயலலிதா.
ஒருமுறை ஆண்ட கட்சி, தொடர்ந்து மறுமுறையும் ஆட்சிக்கு வராது என்ற தமிழக அரசியல் வரலாற்றை உடைத்து, தொடர்ந்து ஆறாவது முறையாக ஜெயலலிதாவை தமிழக மக்கள் ஆட்சிக் கட்டிலில் ஏற்றியதற்கு, ஜெயலலிதாவின் சாதனைகள்தான் காரணம்.
தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழவேண்டும் என்று தமிழக மக்கள் எடுத்த முடிவு. அந்த முடிவு தமிழகத்தில் பல கட்சிகளின் கற்பனைகளுக்கு முடிவு கட்டியது. பலரின் முதலமைச்சர் கனவுகளுக்கு முடிவு கட்டியது.
அந்த மனப் புழுக்கம் இன்றும் குறையாத காரணத்தால்தான், ஜெயலலிதாவின் உருவுருவப் படம் சட்டமன்றத்தில் திறக்கப்படக் கூடாது என்று கூக்குரல் இடுகிறார்கள்.1967-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை சிலருக்கு, ஒரு உறுப்பினரைக் கூட சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சல் சிலருக்கு, "மக்கள் குரலே மகேசன் குரல்" என்று சொல்லுவார்கள்.
அந்த மக்களிடமிருந்து எந்த எதிர்ப்புக் குரலும் வரவில்லை."தெய்வத்தின் விக்ரகம் கோவிலிலே இடம் பெறக்கூடாது" என்று பக்தர்கள் சொல்லவே மாட்டார்கள். தமிழகத்தை வளமாக்கிய ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் அந்தப் பொன்னாள் எப்பொழுது வரும் என்றுதான் தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழினம் வெறுத்து ஒதுக்கிய சிலர், தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட சிலர் மட்டும், கொஞ்சம்கூட அரசியல் நாகரீகமே இல்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கல்லூரிகள் திறந்து, பாடம் நடத்தினாலும் அவர்களுக்கு அரசியல் நாகரீகம் வரவே வராது.
ஏற்கனவே ஆண்ட சிலருக்கும், இனி ஆள நினைக்கும் சிலருக்கும், தலைசிறந்த முன்னுதாரணம் ஜெயலலிதா.பலருக்கு அரசியல் பாடமாகத் திகழ்பவர் ஜெயலிதாவின் உருவப் படம் சட்டமன்றத்திலே திறக்கப்படுவது, சட்டமன்றத்திற்குப் பெருமை தமிழ் நாட்டுக்கே பெருமை ஏன்? உலக தமிழர்களுக்கே பெருமை என்று ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago