கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் தொகையை அதிகரித்து முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஓய்வு பெற்ற கிராமக் கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத் தொகையை 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்: இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து 60 வயதினை நிறைவு செய்த ஓய்வு பெற்ற கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியமாக 750 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

பூசாரிகளின் வயதினையும், தற்பொழுது நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத் தொகையை 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதவ்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்கள், ஒரு பெண்கள் கல்லூரி, ஒரு மேல்நிலைப் பள்ளி, இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு ஆரம்பப் பள்ளி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நிதி இடர்பாடுகளை களைந்து செம்மையான நிர்வாகத்தை மேற்கொள்ள தற்போது இத்திருக்கோயில்களுக்கென அரசால் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் மானியத் தொகையான 1 கோடி ரூபாய் தொகையை 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்