பசுமை போர்வை நீக்கத்தால் அதிகரிக்கும் கதிர் வீச்சு: நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிப்பது ஏன்?

By கி.மகாராஜன்

பூமிப்பரப்பை வெப்பத்திலிருந்து பாதுகாத்து வந்த பசுமை போர்வை பல்வேறு காரணங்களுக்காக கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வருவதால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்து வெயில் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திர நாட்களை காட்டிலும் இப்போது வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகமாக உள்ளது. தற்போது அடிக்கும் வெயிலின் அளவை பொருத்தவரை கடந்த காலங்களை ஒப்பிடும்போது பெரியளவில் மாற்றம் இல்லை. ஆனால் வெப்பத் தாக்குதலை பொருத்தவரை கடந்த காலத்தை விட இப்போது அதிகமாக உள்ளது. வெயிலுக்கு பயந்து மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் சாலை கள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மாலை வேளையில் வெயிலின் அளவு குறைந்தாலும், வெப்பத்தின் தாக்கம் இரவிலும் நீடிப்பதால் மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. இருப்பினும் இதற்கு முன்பு வறட்சி நிலவியது போது கூட வெயிலின் தாக்கம் இந்தளவு இருந்ததில்லை. இப்போது வெயிலின் தாக்குதல் உக்கிரம் அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் பூமிப்பரப்பை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து வந்த பசுமை போர்வை அகற்றப்படுவது தான் என்கின்றனர் வல்லுநர்கள்.

இது தொடர்பாக அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் உதவி பேராசிரியர் டி.ஸ்டீபன் கூறியதாவது:

பூமி பரப்பை பாதுகாக்க ஒரு பசுமை போர்வை வேண்டும். மரங்கள், செடிகள் உள்ளிட்ட தாவரங்கள்தான் அந்த பசுமை போர்வை. தற்போது பல்வேறு காரணங்களுக்காக படிப்படியாக பசுமை போர்வை அகற்றப்பட்டு வருகிறது. தங்க நாற்கரச் சாலைக்காக நாடு முழுவதும் பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டன. ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதில் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சாலை அமைப்பதற்காக பழைய மரங்களை வெட்டுகின்றனர். அதற்கு பதிலாக புதிய மரங்கள் நடுவதில்லை. இப்போது உயர் நீதிமன்ற உத்தரவால் கருவேல மரங்கள் வெட்டப்படுகின்றன. கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி மொத்தமாக அழிக்கும்போது அந்த மரங்களுக்கு இடையே வளர்ந்திருந்த கொடுக்காபுளி, இலந்தை, நாட்டு கருவை மரங்களும் அகற்றப்படுகின்றன.

இதனால் பூமிப்பரப்பில் மரங் களே இல்லாத நிலை ஏற்படும் போது, சூரிய வெளிச்சம் நேரடியாக தரையில் படும். தரையிலுள்ள குறைந்தபட்ச ஈரமும் வெப்பத்தால் ஆவியாகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர் பூச்சிகள் இறந்து, அந்த இடம் பாலைவனமாக மாறும். இதனால் வெப்பக் கதிர்வீச்சு அதிகமாக உள்ளது. முன்பு கான்கிரீட் காடுகள் என்றழைக்கப்படும் நகர் பகுதியில்தான் அதிக வெப்பம் இருக்கும். ஆனால் தற்போது புறநகர் பகுதியிலும் மரங்கள் வெட்டப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. இதனால் வெப்பத்தின் தாக்கம் அனைத்து பகுதிகளுக்கும் பரவி வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்