விஷு பண்டிகை: ஜெயலலிதா வாழ்த்து

மலையாள மக்களின் புத்தாண்டான விஷு பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:

புத்தாண்டு திருநாளாம் ‘விஷு’ திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழும் இடங்களில் எல்லாம் தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபு களையும் விடாது பேணிப் பராமரிக் கும் மலையாள மக்கள், விஷு பண்டிகை யன்று அதிகாலை கண்விழித்து விஷு கனி கண்டு, புலரும் புத்தாண்டு செல்வமும், மகிழ்ச்சியும் கொழிக்கும் ஆண்டாக விளங்க வேண்டி இறைவனை மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடுவர்.

இத்திருநாளில் வீட்டிலுள்ள பெரியோர் களிடம் இளையவர்கள் ஆசி வேண்டுவர். ஆசி வழங்கும் பெரியவர்கள், ஆசியோடு அன்பையும் கலந்து பணப் பரிசு வழங்கும் ‘விஷு கைநீட்டம்’ நிகழ்ச்சி, காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும்.

இந்தப் புத்தாண்டில் மலையாள மக்கள் அனைவரும் எல்லா வளமையும், இனிமையும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

விஷு பண்டிகையை முன்னிட்டு சபரி மலை, குருவாயூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE