மண்டபம் மீனவர்கள் 15 பேரின் காவலை இலங்கை நீதிமன்றம் இன்று மீண்டும் பிப்ரவரி 3 வரை நீட்டித்து உத்திரவிட்டது தமிழக மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த ஜனவரி 2 அன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென்கடல் பகுதி யைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 25 மீனவர்களை இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி சிறைபிடித்து 5 படகுகளையும் கைப்பற்றினர்.
சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 15 பேரை கல்பிட்டி கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த கடந்த புதன்கிழமை இந்திய - இலங்கை இருநாட்டிலும் காவலில் உள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் மற்றம் இலங்கை அமைச்சர் ரஜீதா சேனரத்னே ஆகியோர் தலைமையில் இருநாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளும் இணைந்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இலங்கை ரஜீதா சேனரத்னே, இலங்கை சிறையில் இருக்கும் அனைத்து தமிழக மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 14 அன்று 52 மீனவர்களும், ஜனவரி 17 அன்று 121 மீனவர்களும், சனிக்கிழமை 60 மீனவர்களும் என இதுவரை இலங்கை நீதிமன்றங்களினால் கடந்த வாரம் வாரத்தில் 233 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதுபோல தமிழக அரசு ஜன 13 அன்று 52 மீனவர்கள், ஜன 17 அன்று 61 மீனவர்கள், ஜனவரி 18 அன்று 17 மீனவர்கள் என 130 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்தது.
அதன் அடிப்படையில் திங்கட்கிழமை புத்தளம் நீதிமன்றத்தினால் 15 மண்டபம் மீனவர்களும் விடுவிப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் புத்தளம் நீதிமன்றம் 15 மீனவர்களின் காவலை பிப்ரவரி 3 வரை நீட்டித்து உத்திரவிட்டது தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago