இலங்கையிலிருந்து 19 தமிழக மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்

By செய்திப்பிரிவு

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் ராமேசுவரம் மீன்பிடித்தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மா னம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததால் அதிபர் ராஜ பக்சே பெருமகிழ்ச்சி அடைந்தார்.

அதன் வெளிப்பாடாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்ட தமிழக மீனவர்கள் 98 பேரை யும் உடனடியாக விடுதலை செய்யு மாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட் டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 26 அன்று இலங்கை கடற் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரின் நீதிமன்ற காவல் முடியும் முன்னரே மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ராஜபக்சேயின் உத்தரவின் பேரில் தமிழக மீனவர்கள் 19 பேரையும் மன்னார் நீதிபதி லெனின் குமார் விடுதலை செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, விடுதலை செய்யப் பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரும் பேச்சாலையில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தலைமன் னாரில் உள்ள இலங்கை கடற்படை தளத்திலிருந்து புறப்பட்டு 12 மணி யளவில் இலங்கை கடற்படையினர் 19 மீனவர்களையும் சர்வதேச நீர்பரப்பில் இந்திய கடற்படையின ரிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் 19 பேரும் தங்களின் படகுகளுடன் ஞாயிறு மாலை ராமேசுவரம் மீன்பிடித் தளத்துக்கு வந்தனர்.

தாயகம் திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் செய்தியாளரிடம் கூறிய தாவது, "இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன் சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததால் நாங்கள் இலங்கை அரசால் விரைவில் விடு விக்கப்பட்டோம். இல்லையெனில் மாதக்கணக்கில் இலங்கை சிறை களில் கழித்திருப்போம்'' என்றனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற னர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் மீனவர்களை விரட்டி அனுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்