திருப்பூர் மாநகரில் அரசு, மாநகராட்சிப் பள்ளிகள் கட்டாயக் கட்டண வசூல்?

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாநகரில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கட்டாய கட்டண வசூல் நடைபெறுவதாக பெற்றோர் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாநகரில் மிக முக்கிய பள்ளிகளில் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. 6-ம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை ஆங்கிலவழிக் கற்றல் படிப்புகளுக்கு, ரூ.3,000 தொடங்கி 5,000 வரை வகுப்பு வாரியாக தொகை நிர்ணயித்து வசூலிக்கின்றனர். தமிழ்வழிக் கற்றலுக்கு ரூ.500 தொடங்கி 5,000 வரை வசூலிக்கின்றனர். இவற்றை செலுத்தி தான் பள்ளியில் குழந்தைகளை சேர்த்துள்ளோம் என்கின்றனர் சிலர்.

‘அம்மாபாளையம் மாநகராட்சி பள்ளியில் என் குழந்தையை சேர்க்க ரூ.1000 கேட்டார்கள். பணத்தை கட்டித்தான் பள்ளியில் சேர்த்தேன்’ என்றார் துப்புரவுத் தொழிலாளி.

ஜெய்வாபாய் பள்ளியின் பெற் றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆ.ஈசுவரன்:

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி களில் கட்டணத்தை நிர்பந்தித்து ரசீதின்றி பணம் பெறுகின்றனர். சுயநிதிப் படிப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதை பிரதானமாகக் கொண்டு வசூலிக்கின்றனர். பள்ளி வளர்ச்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் விவரங்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆங்கிலவழிக் கற்றலுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் போன்ற அடிப்படை விவரங்கள் கூட கேட்டுப் பெற முடியாது என்றார்.

நஞ்சப்பா மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன்:

ஜூன் 12-ம் தேதி வரை 512 பேர் சேர்ந்துள்ளனர். கட்டாயக் கட்டணம் வசூலிப்பதில்லை. பெற்றோர்களிடம் பெறப்படும் கட்டணத்தில், தேர்வு வினா, விடைத் தாளுக்கான செலவு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப் பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம், துப்புரவு மற்றும் பாதுகாப்பு காவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.

ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி:

1,200 மாணவிகள் ஜூன் 12-ம் தேதி வரை சேர்ந்துள்ளனர். 35 ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆங்கில வழிக்கற்றலுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.2,000-ம், 9, 10-ம் வகுப்பு வரை 3,000 வரை, பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கு ரூ.2,000 தொடங்கி 3,000 வரை வசூல் செய்கிறோம். மாநகராட்சிப் பள்ளி என்பதால், யாருக்கும் ரசீது வழங்குவதில்லை. வசூல் செய் யும் பணத்தை வங்கியில் செலுத்து கிறோம். பெற்றோர்களிடம் கட்ட ணம் குறித்து கட்டாயப்படுத்துவ தில்லை என்றார்.

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி:

பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக எனக்கும் தனிப்பட்ட புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி, நிச்சயம் ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்