தமிழ்நாடு கால்நடைத் துறையில் காலியாக உள்ள சுமார் 3,300 பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களால் அதிகப்ப டியான பணிச்சுமையில் சிக்கித் தவிப்பதாக கால்நடைத்துறை ஊழியர்கள் வேதனை தெரிவித் துள்ளனர்.
கால்நடைத் துறை சார்பில், கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை கிளை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனை, பன்முக மருத் துவமனை ஆகியன செயல்பட்டு வருகின்றன.
கால்நடை கிளை நிலையங்களில் கால்நடை ஆய்வாளரும், கால்நடை மருந்தகங்களில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் 2 கால்நடை பராமரிப்பாளரும் பணியில் இருக்க வேண்டும்.
கால்நடை கிளை நிலையங்க ளில் கால்நடைகளுக்கு முதலு தவி, மாடுகளுக்குச் சினை ஊசி இடும் சிகிச்சையும், கால்நடை மருந்தகங்களில் அனைத்து வகை சிகிச்சையும் இலவசமாக அளிக்கப் படுகிறது. சில சிகிச்சைகளுக்கு மட்டும் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிகிச்சை மட்டுமன்றி விலை யில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கறவை மாடுகள் வழங்கும் திட்டம், மாநில தீவனப் புல் அபி விருத்தித் திட்டம், மாநில கோழிப் பண்ணை அபிவிருத்தித் திட்டம், தேசிய கால்நடை அபிவிருத்தி முகமை மற்றும் கால்நடைகளுக் கான காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களும் கால்நடைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.
எனினும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஊழியர்கள் கடும் பணிச்சுமையுடன் பணியாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.
மாநில அளவில் நியமனம்
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பொண்ணுபாண்டியன் கூறியதா வது: ‘‘தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 2,465 கால்நடை மருந்தகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் 2,674.
கால்நடை மருந்தகங்களில் 800-க்கும் அதிகமான கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் பணியிட மாற்றம் மறுக்கப்படுகி ற து. இதேபோல, 1,500 கால்நடை பராமரிப்பு உதவியாளர், 1,000 கால்நடை ஆய்வாளர் பணியி டங்களும் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்பு மாறு சங்கத்தின் சார்பில் கால் ந டைத் துறை இயக்குநர், செய லாளர் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பயனில்லை.
கால்நடை ஆய்வாளர் பணியிடங் களை மாவட்ட அளவிலேயே கால் நடைத் துறை மண்டல இயக்குநர் அல்லது உதவி இயக்குநர்களே நியமிக்கலாம். ஆனால், மொத்த மாக மாநில அளவில் நியமிக்க முடிவு செய்ததையடுத்து, சுமார் ஏழரை லட்சம் விண்ணப்பங்கள் வரப் பெற்றன. ஆனால், இதுவரை தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படவில்லை.
காலிப் பணியிடங்கள் காரண மாக ஏற்கெனவே கால்நடை உதவி மருத்துவர்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டு வரும் நிலையில், நலத் திட்டங்களுக்கான கோப்பு களையும் கையாள்வதால் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். சிகிச்சைக்கு வரும் கால்நடை களைத் தொடர்ந்து கவனிக்க முடி யாத நிலை ஏற்படுகிறது.
சவாலாகும் பயனாளிகள் தேர்வு
அதேபோல, அரசின் நலத் திட் டங்களுக்கு தகுதியான பயனா ளிகளைத் தேர்வு செய்வதில், நிறைய தலையீடுகளும், மிரட்டல் களும் வருகின்றன. இதனால், பயனாளிகளைத் தேர்வு செய்வது பெரிய சவாலாக உள்ளது.
தற்காலிக அடிப்படையில் பணி யாற்றி வரும் கால்நடை உதவி மருத்துவர்கள் சுமார் 630-க்கும் அதிகமானோரும் பணி நிரந்தரம் செய்யப்படுவோமா என்ற மன உ ளைச்சலில் உள்ளனர். இவர் களை பணி நிரந்தரம் செய்வதுடன், காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு விரைந்து நிரப்ப வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago