வன்கொடுமை, வரதட்சணை கொடுமை போன்றவற்றால் பாதிக் கப்படும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க அவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு அவசியம் என அதிகாரிகள், வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கோவில் வெண்ணியை அடுத்த சித்தப் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகப்பன்(40). இவரது மனைவி கவுரி(24). தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவரைப் பிரிந்த கவுரி, நீடாமங்கலத்தை அடுத்த ராயபுரத்தில் உள்ள தந்தை கவுதமன் வீட்டில் வசித்து வந்தார். பின்னர், மீண்டும் கணவருடன் சேர்ந்து நீடாமங்கலத்தில் வாடகை வீட்டில் கவுரி வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு கவுரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதற்கு முன், தன் கணவர் முருகப்பன் தன்னை கொடுமை செய்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது மகள் பிரதிக்சாவை(2) தனது பெற்றோர்தான் வளர்க்க வேண்டும் என்றும் கூறி, தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்திருந்தார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து முருகப்பனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கவுரியின் தந்தை கவுதமனிடம் கேட்டபோது, “நான் விவசாயக் கூலி வேலை செய்கிறேன். நாங்கள் ஏழைக் குடும்பம் என்பதால், எனது மகள் திருமணமாகி செல்லும் இடத்திலாவது வசதியாக வாழட்டுமே எனக் கருதி, பெண் கேட்டு வந்த 36 வயது முருகப்பனுக்கு, 20 வயதே ஆன எனது மகளை 2013-ல் திருமணம் செய்துகொடுத்தோம்.
பாலியல் கொடுமை
திருமணத்தின்போது, 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை கொடுத்தோம். திருமணமானதில் இருந்தே கவுரிக்கு முருகப்பன் பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும், வரதட்சணை கேட்டும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், திருமணமான 5-வது மாதத்தில் எங்கள் வீட்டுக்கு மகள் திரும்பி வந்துவிட்டார்.
பின்னர், ஜீவனாம்சம் கேட்டு நீடாமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பிறகு, எங்களை தொடர்புகொண்ட முருகப்பன், ‘இனி நான் ஒழுங்காக இருக்கிறேன், நீடாமங்கலத்தில் தனிக்குடித்தனம் செல்கிறோம்’ என்று கூறி ஜீவனாம்ச வழக்கையும் வாபஸ் வாங்க வைத்தார்.
நீடாமங்கலத்தில் குடியேறிய பின்னரும், கவுரிக்கு முருகப்பன் தொல்லை கொடுத்து வந்துள்ளார். எங்களுக்கு மீண்டும் தொல்லை தரக்கூடாது என்பதற்காக தற்கொலை முடிவை எடுத்துள்ளார் கவுரி. அதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ பதிவுதான் இதற்கு சாட்சி” என்றார்.
சட்ட வழிமுறை உண்டு
இதுகுறித்து மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி கூறியதாவது: குடும்ப வன்முறையால் திருமணமான பெண்கள் பாதிப்படையும்போது, சமூகநலத் துறையை அணுகினால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த சட்ட உதவி செய்யப்படும். பெண்களுக்கான இருப்பிட வசதி, ஜீவனாம்சம் போன்றவற்றை பெறுவதற்கு வழக்கு நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். கவுன்சலிங் மூலமாகவும் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும். எனவே, பெண்கள் குடும்பப் பிரச்சினையால் பதற்றத்தில் முடிவெடுக்காமல் தீவிரமாக யோசித்து சட்ட வழிமுறையை பின்பற்றுவதே சிறந்தது. தற்கொலை தீர்வாகாது என்றார்.
திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மல்லிகா கூறியதாவது: குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 4 ஆண்டுகள் முதல் ஆயுள் மரண தண்டனை வரை கிடைப்பதற்கும் வழிவகை உள்ளது. திருமணமான பெண்கள் கவுரியைபோல வன்கொடுமையிலோ அல்லது வரதட்சணைக் கொடுமையிலோ சிக்கிக்கொண்டால் நேரில்தான் புகார் அளிக்க வேண்டும் என்பதில்லை. ரத்த உறவுகள் மூலமாகவும் புகார் அளிக்கலாம், அல்லது 1091 என்ற தொலைபேசி எண்ணில் பேசினால் மகளிர் காவல்நிலையத்துடன் இணைக் கப்பட்டு புகார் பதிவு செய்யப் படும். செல்போன் வசதி இல்லை என்றால், ஒரு வெள்ளைத்தாளில் எழுதி அருகில் உள்ள மகளிர் காவல்நிலையம் அல்லது வரு வாய்த்துறை அலுவலகத்துக்கு தபாலில் அனுப்பினாலும் நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago