தமிழகத்தில் மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர், சிவகங்கை, திருநெல்வேலி, ராஜபாளையம், சென்னை உள்ளிட்ட ஊர்களில் பரவலாக எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தித் தொழில் நடைபெறு கிறது. மதுரை மாவட்டத்தில் அனுப்பானடி, வில்லாபுரம், ஜெய்ஹிந்த் புரம், ஒத்தக்கடை, ஐராவதநல்லூர், செல்லூர், சோலை அழகு புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட எவர்சில்வர் பாத்திரப் பட்டறைகள் உள்ளன. இங்கு தினமும் எவர்சில்வர் பாத்திரங்களை உற்பத்தி செய்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் பிற மாவட்ட சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும், 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
ஒரு காலத்தில் திருமண முகூர்த்தம், பண்டிகைக் காலங்களில் கடைகளில் எவர்சில்வர் பாத்திர விற்பனை பொதுமக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. திருமண சீர்வரிசைக்கு எவர்சில்வர் பாத்திரங்களை அடுக்கிவைத்த காலம் மாறிப்போய் தற்போது பிளாஸ்டிக், பீங்கான், எலக்ட் ரானிக்ஸ், கர்லான் மெத்தை, தேக் குக் கட்டில் உள்ளிட்ட ஆடம்பர வீட்டு உபயோகப் பொருட்களை சீர்வரிசையாக வழங்கும் காலம் வந்துவிட்டது. அதனால், எவர்சில் வர் பாத்திரங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதால் போதிய வருமானம் இல்லாமல், இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் மாற்றுத் தொழிலை நாடிச் சென்றனர்.
பாத்திர உற்பத்திக்கு பயன்படுத் தப்படக் கூடிய காஸ், ஆயில் மற்றும் சோப் உள்ளிட்ட மூலப்பொருட்கள் உடலை பாதிக்கக்கூடியவை என்பதால், இந்தத் தொழிலுக்கு வர இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை. அத னால், பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களே, பாத்திர உற்பத் தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்களில், நவீன இயந்திரங்களின் உதவியுடன் குறுகிய காலத்தில் விதவிதமான தரமான சில்வரைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பாத்திரங் களுக்கே, உள்நாட்டுச் சந்தைகளில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் பெரும் பாலும், நடுத்தர, மட்டரகமான மூலப்பொருட்களைக் கொண்டு குறுகிய முதலீட்டில் நிறைந்த லாபம் என்ற வணிகத்தில் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், வெளிமாநிலச் சந்தைகளில் தமிழக பாத்திரங்களுக்கு வரவேற்பு கிடைப்பதில்லை.
இதுகுறித்து மதுரை அனுப்பா னடியைச் சேர்ந்த எவர்சில்வர் பாத்திரங்கள் உற்பத்தியாளர் பி.பாக்கியநாதன் கூறியதாவது: எவர்சில்வர் தகட்டில் இருந்து அண்டா, அடுக்கு டிபன் கேரியர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட எவர்சில்வர் பாத்திரங்கள் செய்யப் படுகின்றன. தற்போது நடுத்தர, மட்டரகமான எவர்சில்வர் தகட் டில் இருந்தே பெருமளவு பாத் திரங்களை உற்பத்தி செய்கிறோம். ஒரிஜினல் எவர்சில்வர் பாத்திரங்கள் செய்வது அபூர்வமாகவே இருக் கிறது என்றார்.
இளைஞர்களை ஈர்க்காத தொழில்
பாக்கியநாதன் மேலும் கூறும்போது, "ஆரம்ப காலத்தில் நாங்களே சில்வர் தகடுகளை வாங்கி உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்தோம். தற்போது மூலப்பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்ய பொருளாதாரம் இல்லாததால் வியாபாரிகளே மூலப்பொருட்களை வாங்கிக் கொடுத்து ஆர்டர் கொடுக்கின்றனர். எங்களுக்கு செய்கூலி மட்டும் வருமானம். நன்றாக வேலை செய்தால் நாளொன்றுக்கு ரூ.350 முதல் ரூ.500 வரை கூலி கிடைக்கும். 50 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரை உள்ள எவர்சில்வர் பாத்திரங்களை உற்பத்தி செய்கிறோம். வேலை தெரிந்தவர்கள் மட்டுமே, இந்தத் தொழிலில் ஈடுபட முடியும். இந்தத் தொழில் இளைஞர்களை ஈர்க்காததால் 50 பேர் இருந்த பட்டறைகளில் இன்று 3 பேர் முதல் 5 பேர் மட்டுமே வேலைபார்க்கின்றனர்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago