தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவிலிருக்கும் சர்வதேச விமான நிலையம், ராணுவம், கடற்படை கேண்டீன்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த எல்.அல்சர் உசேன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள மதுபான கடைகளை மூட உச்ச நீதிமன்றம் 31.3.217-ல் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவிற்குள் செயல்பட்டு வரும் எப்எல்2, எப்எல்3, எல்எல்3ஏ, எப்எல்3ஏஏ உரிமம் பெற்ற அனைத்து மதுபான கடைகளையும் மூட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் 31.3.2017-ல் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் மது விற்பனையைப் பொறுத்தவரை 11 விதமான உரிமங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் எப்எல்2, எப்எல்3, எல்எல்3ஏ, எப்எல்3ஏஏ உரிமம் பெற்று நடைபெறும் மது விற்பனையை மட்டும் நிறுத்துவதற்கு மட்டுமே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் சர்வதேச விமான நிலையங்கள், ராணுவ கேண்டீன்கள், கடற்படை கேண்டீன்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றன. உச்ச நீதிமன்றம் மது போதையால் விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்திலேயே தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுபான விற்பனை முழுமையாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுப்படி சர்வதேச விமான நிலையங்கள், ராணுவம், கடற்படை கேண்டீன்களில் மதுபான விற்பனைக்காக வழங்கப்படும் எப்எல்-4ஏ, எப்எல்-5, எப்எல்-7, எப்எல்-9, எப்எல்-10 உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
இது தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 2.6.2017-ல் மனு அனுப்பினேன். இந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய, மாநில நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள், ராணுவம், கடற்படை கேண்டீன்களில் மது விற்பனையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.கோகுல் வாதிட்டார். மனுவுக்குப் பதிலளிக்க உள்துறை முதன்மை செயலர், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மதுவிலக்கு ஏடிஜிபி ஆகியோரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago