தாதுமணல் விற்பனையை அரசே ஏற்பதற்கு மீனவர்கள் வரவேற்பு

By என்.சுவாமிநாதன்

குமரியில் கதிரியக்க பாதிப்புகளை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

`தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என கருதப்படும் நிலையில், மீனவர் நலன் சார்ந்து இந்த விவகாரத்தை அரசு அணுக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரக் கிராமங்களில் அதிக அளவில் தாது மணல் எடுக்கப்படுகிறது. இதில் குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியில் தாது மணல் எடுக்கும் பணியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய அரியவகை மணல் ஆலை ஈடுபட்டு வருகிறது.

புற்றுநோய் பாதிப்பு

இந்த ஆலையில் இருந்து பெர்கான், புளுட்டோனியம், இலுமனைட், ரூட்டைல் உள்ளிட்ட தாதுக்கள் இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த வெப்ப கதிர்வீச்சு காற்றில் கலந்து பரவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பலர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மணவாளக்குறிச்சி சுற்றுவட்டாரக் கிராமங்களில் 200-க்கும் மேற்பட்டோரும், குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் 400-க்கும் மேற்பட்டோரும் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

தனியார் நிறுவனம்

குமரியில் சில ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனம் தாது மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்டது. மிடாலம், குறும்பனை, ஆரோக்கியபுரம் பகுதி மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2005-ம் ஆண்டுக்கு பின் தாது மணல் எடுக்கும் பணியை அந்நிறுவனம் கைவிட்டது.

ஆனால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, இந்திய அரியவகை மணல் ஆலை தொடர்ந்து தாது மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதை முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆய்வுக்குழு வேண்டும்

இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் பெர்லின் கூறும்போது, `மணவாளக்குறிச்சி அரிய வகை மணல் ஆலையின் மூலம் தாது மணல் எடுப்பதற்கான கால அளவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இதுபோன்ற ஆலைகளை இயக்கும்போது, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிமையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். கனரக இயந்திரங்களைக் கொண்டு மணல் எடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான விதிகள் உள்ளன. ஆனால், அவ்விதிகள் மீறப்பட்டுள்ளன.

கடலோரக் கிராமங்களில் தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட கதிரியக்கத்தால் தான் குமரியில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது தாது மணல் எடுக்கும் பணியை அரசே மேற்கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை லாப நோக்கத்தோடு அணுகாமல் மீனவர்களின் நலன் சார்ந்து சிந்தித்து ஆய்வு செய்யக் குழு அமைக்க வேண்டும்.

தாது மணலுக்காக மண் எடுக்கப்படுவதும் கடல் சீற்றத்துக்கு காரணமாக இருக்கும் என கருதுகிறோம். மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். குமரி கடலோரக் கிராமங்களில் கதிரியக்க பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு சிறப்புக் குழு அமைக்க வேண்டும்” என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்