கமிஷனர் அலுவலகத்தில் போலி எஸ்.ஐ: போலீஸார் மடக்கிப் பிடித்தனர்

கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த போலி எஸ்ஐயை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். வேப்பேரியில் சென்னை போலீஸ் கமிஷனரின் புதிய அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்துக்குள் நேற்று மர்ம நபர் ஒருவர் நுழைந்து லிப்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துணை ஆணையர் மனோகரன், உதவி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் அவரைப்பார்த்து சந்தேகமடைந்து விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர், “ நான் அண்ணாநகரில் எஸ்.ஐ ஆக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் அவரை விசாரிக்குமாறு துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பாலமுருகன்(35) என்றும் இன்ஸ்பெக்டர் அன்பழகன் என்பவரிடம் ரூ.3 லட்சம் பணம் கட்டி சப் இன்ஸ்பெக்டராக போலி ஐ.டியை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கமிஷனர் அலுவலகத்திலேயே போலி எஸ்.ஐயாக ஒருவர் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE