ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மட்டுமே வறட்சி நிவா ரணம் வழங்கப்படும். ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாயம் செய் பவர்களுக்கு நிவாரணம் கிடையாது என நிபந்தனைகள் விதிக்கப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிக் கப்பட்டதால் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரை விட்டுள்ளனர். வறட்சி நிவாரணத் துக்கு ரூ.39 ஆயிரம் கோடி தேவை என்ற தமிழக அரசின் கோரிக் கையை இன்னமும் பரிசீலனை அளவிலேயே வைத்திருக்கிறது மத்திய அரசு. இதனால், சொந்த நிதியில் இருந்தே நிவாரணம் வழங்கும் பணிகளைத் தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
இதன்படி, விவசாய நிலங்களில் நெற்பயிருக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.5,465 என நிவாரணத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதில், ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5 ஏக்கருக்கு மேல் நிவா ரணம் வழங்க முடியாது என்ற அரசின் நிலைப்பாடு விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வீர.இளங் கீரன், ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
ஏற்கெனவே விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோது 5 ஏக்கருக்கும் கூடுதலாக 5 சென்ட் நிலம் இருந்தாலும், அவர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்று கூறினர். இப்போது, எத்தனை ஏக்கர் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணம் என்கிறார்கள். அத்துடன், ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாயம் செய்பவர்களுக்கு நிவாரணம் கிடையாது என்கின்றனர்
நீதிமன்றம் செல்வோம்
இப்படி பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று வலியுறுத்தி அரை நிர்வாணப் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியும் பலனில்லை. எங்கள் கோரிக் கையை முதல்வருக்கு மனுவாக அனுப்பியுள்ளோம். முதல்வர் தரும் பதிலை வைத்து அடுத்த கட்டமாக நீதிமன்றம் செல்ல முடிவெடுத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி கேட்டதற்கு வருவாய் நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசு வறட்சி நிவாரணத்துக்காக அளித்துள்ள புதிய விதிமுறைகளின்படிதான் தற்போது நிவாரணம் வழங்கப்படு கிறது. 5 ஏக்கர் என்ற கட்டுப்பாடும் அதில்தான் உள்ளது. சிறு விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இப்போது இருக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டு, முதல்கட்ட நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீடு மூலம் இழப்பீடு கிடைக்கும்போது அதிக தொகை கிடைக்கும். 5 ஏக்கர் என்ற வரம்பின்றி, பாதிக்கப்பட்ட நிலங்கள் அனைத்துக்கும் நிவாரணம் தரவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ள நிதி வந்தபிறகு இதுபற்றி பரிசீலிக்கப் படலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
வறட்சி நிவாரணம் குறித்து தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை இன்னும் நான்கைந்து நாட்களில் அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். 2012-ல் ஏற்பட்ட வறட்சியின்போது ரூ.1,300 கோடிதான் நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் 50.35 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்ட 32.30 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.2,247 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 31 மாவட்டங்களைச் சேர்ந்த 31 விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்கி, முதல்வர் இத்திட்டத்தை கடந்த 6-ம் தேதி தொடங்கிவைத்தார்.
நாட்டிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் 15 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.410 கோடி, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 2 மாதங்களில் 15 லட்சம் விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணமாக காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago