தமிழகம் முழுவதும் ரூ.1214 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

1214 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி சேவை மையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், பாலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா 16.6.2015 அன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் - கண்டமங்கலத்தில் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், 1212 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், கிராம ஊராட்சி சேவை மையங்கள், வட்டார ஊராட்சி சேவை மையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், பாலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள், அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற சாலை வசதிகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும், ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மிக இன்றியமையாததாகும்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செயல்படுத்துகின்ற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் - கண்டமங்கலத்தில் 17,000 சதுர அடி கட்டிட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கூட்டரங்கம், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சிபுரம், அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர் , திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 62 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள்; கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 75 ஊராட்சி அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 1095 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 56,830 சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்;அரியலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 24 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 193 கிராம ஊராட்சி சேவை மையங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டம் - தா.பழூர் மற்றும் திருமானூர், நாகப்பட்டினம் மாவட்டம் - மயிலாடுதுறை, திருநெல்வேலி மாவட்டம் - சங்கரன்கோவில், திருவள்ளூர் மாவட்டம் - எல்லாபுரம் ஆகிய இடங்களில் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வட்டார ஊராட்சி சேவை மையங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம் - காட்டாங்கொளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வகோட்டை, வேலூர் மாவட்டம் - வாலாஜா மற்றும் கே.வி. குப்பம், அரியலூர் மாவட்டம் - அரியலூர் ஆகிய இடங்களில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்கள்;சிவகங்கை மாவட்டம் - கல்லல், காளையார்கோயில் மற்றும் திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் - திருமயம், நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம் ஆகிய இடங்களில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் - காவேரிப்பட்டினம் மற்றும் வேப்பனஹள்ளி, சேலம் மாவட்டம் - வாழப்பாடி மற்றும் அயோத்தியாபட்டணம், சிவகங்கை மாவட்டம் - தேவகோட்டை மற்றும் இளையான்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணிகண்டம், விழுப்புரம் மாவட்டம் - ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 13 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பாலங்கள்; ஈரோடு மாவட்டம் - மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 46 புதூர், இராமநாதபுரம் மாவட்டம் - இராமநாதபுரம் ஒன்றியத்தில் தேவிபட்டினம், திருப்பூர் மாவட்டம் - பல்லடம் ஒன்றியத்தில் கோடங்கிபாளையம், விருதுநகர் மாவட்டம் - விருதுநகர் ஒன்றியத்தில் கோட்டையூர் ஆகிய இடங்களில் 6 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 பேருந்து நிலையங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மொத்தம் 1214 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி சேவை மையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், பாலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை ஜெயலலிதா திறந்து வைத்தார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்