டெல்லி பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழக அரங்கு

By செய்திப்பிரிவு

டெல்லி பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுடெல்லியில் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2014 தமிழ்நாடு நாள் விழாவை நேற்று தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி பிரகதி மைதானத் தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. 34-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2014, நவம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்டு, வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்பொருட்காட்சியில் 26 மாநிலங்கள், 4 இந்திய யூனியன் பிரதேசங்கள், அரசு சார்ந்த நிறு வனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் 25 வெளிநாடு கள் பங்கேற் றுள்ளன.

தமிழக திட்டங்களை பல்வேறு மாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட் டுள்ளது.

நடப்பாண்டில் இப்பொருட் காட்சிக்கான கருப்பொருள் மகளிர் தொழில் முனைவோர் என்பதாகும். இதன்படி, அரசின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து, ஆக்கப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

பெண்களின் நலனுக்கான சிறப்புத் திட்டங்களான விலை யில்லா அரிசி, விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம், மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், முதல்வரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டம், பசுமை வீடுகள் மற்றும் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம் போன்றவை சிறப்புற விளக்கப் பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக திட்டங்களை பல்வேறு மாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளன. அரசின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து, ஆக்கப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE