‘ஐ.டி. ஊழியர்கள் என்றால் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்று வார்கள். வாரக் கடைசியில் உற்சாகமாக ஊர் சுற்றுவார்கள்’ என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங் களில் பொது இடங்களில் ஆதர வற்ற நிலையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்களிடம் அனுசரணையாகப் பேசி, அவர் களுக்கு வேலைவாய்ப்பு, அரசு உதவிகள் போன்றவற்றை பெற்றுத் தரும் பணியில் ஐ.டி. ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பெருங்களத்தூரில் வசிப்பவர் சக்தி (29). எம்பிஏ பட்டதாரியான இவர், தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக சமூகசேவை ஆற்றிவந்தார். தற்போது, நண்பர்களுடன் சேர்ந்து ‘தி ஹீலர் பவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவோர் என 700-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
ஏழை, எளியவர்களுக்கு கல்வி சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருதல், பொது இடங்களில் வசிக்கும் ஆதரவற்றோர், பெற்றோரால் கைவிடப்பட்டோருக்கு உணவு வழங்குதல், அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருதல் போன்ற பணிகளில் இந்த அமைப் பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்து, ரயில் நிலையங்கள், கடற்கரை, அரசு மருத்துவமனை நுழைவுவாயில் போன்ற இடங் களில் ஆதரவற்ற நிலையில் இருக் கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தற்போது ‘கர்ணா’ என்ற பெயரில் திட்டம் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர்.
இதுவரை 500-க்கும் மேற்பட்ட முதியோருக்கு கவுன்சலிங் அளித்து, அவர்களுக்கு உணவு, உடைகளும் வழங்கியுள்ளனர். தமிழக அரசு மூலம் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகள், சலுகைகளையும் பெற்றுத் தரு கின்றனர்.
இதுதொடர்பாக ‘தி ஹீலர் பவுண்டேஷன்’ நிறுவனர் சக்தி, அவரது நண்பர் மஹேந்தர் ஆகியோர் கூறியதாவது:
மனித சக்திகளை அறிந்து கொள்வதற்கும், அவர்களுக்கு எங்களால் முடிந்த சேவைகளைச் செய்யவும் நண்பர்களுடன் இணைந்து இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பள்ளி சிறுவர் கள் முதல் ஐ.டி நிறுவனங் களில் வேலை செய்பவர்கள் வரை மொத்தம் 700 பேருடன் இணைந்து பணியாற்றுகிறோம். இதில், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் சுமார் 200 பேர் உள்ளனர்.
பேருந்து, ரயில் நிலையங் கள், கோயில்கள் போன்ற பொது இடங்களில் இருக்கும் மாற்றுத் திறனாளிகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் என ஆதரவற்ற நிலையில் இருப்பவர்க ளிடம் சென்று மனம்விட்டுப் பேசு கிறோம்.
பொதுவாக உதவி செய்ய மனம் உள்ளவர்கள்கூட அவர்க ளுக்குப் பணமோ, உணவோ கொடுத்துவிட்டுப் போய்விடுவார் கள். நாங்கள் அக்கறையோடு சென்று அருகே அமர்ந்து சில மணிநேரம் பேசுவதால், அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். மனம்விட்டுப் பேசுகிறார்கள். இதில், அவர்களிடம் இருக்கும் திறமையை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு சில தனியார் நிறுவனங்களிடம் பேசி வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்து, அவர்களது வருமானத்துக்கும் வழிசெய்கிறோம்.
இதுதவிர, சமூக வலைதளங் கள் மூலமாகவும் அவர்களுக்குப் பல்வேறு உதவிகளைப் பெற்றுத் தருகிறோம். நாங்கள் உதவி பெறு பவர்களிடம் இதுதொடர்பான தகவல்கள், ஆதாரங்களை உடனுக்குடன் அனுப்பி வைக் கிறோம். பள்ளிப் படிப்பை பாதி யில் விடும் மாணவர்களைக் கண்டு பிடித்து அவர்கள் கல்வியைத் தொடரவும் உதவி செய்கிறோம். சென்னை, திருச்சி, கோயம்புத் தூர் ஆகிய இடங்களில் இந்த சேவையைச் செய்து வருகிறோம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago