1997ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் 40 நாடுகளின் பிரதிநிதிகள் புது டெல்லியில் உலக மீன்பிடித் தொழிலாளர் பேரவையை உருவாக்கினர். இதில் உலகளாவிய ரீதியில் மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் தீர்வுகாணும் வகையில் இப்பேரவை நவம்பர் 21-ம் தேதியை சர்வதேச மீனவர் தினமாக பிரகடனப்படுத்தினர்.
நவம்வர் 21, சர்வதேச மீனவர் தினமான இன்று தமிழக, புதுச்சேரி, இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் கருத்துகள்.
தேசிய மீனவர் பேரவைப் பொதுச் செயலாளர் மா. இளங்கோ
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் மற்றும் இலங்கை வடக்கு மாகாண தமிழ் இலங்கை வடக்கு மாகாண தமிழ் மீனவர்களுக்கு தற்போது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருதரப்பு மீனவர்களும் தங்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தும் சூழலும் உருவாகியுள்ளது. இதற்கு ஒரு சுமுகமான முடிவு காண வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும்.
குறிப்பாக இதில் இந்திய அரசும் இலங்கை அரசும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு தமிழக அரசும் புதுச்சேரி அரசும் ஒத்துழைக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தை வெகுவிரைவாக நடைபெற்று இருநாட்டு மீனவர்களும் மீன்வளத்தைப் பங்கிட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வகையில் சூழ்நிலை உருவாக வேண்டும்.
இலங்கை மன்னார் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் ரஹிம்
இந்திய மீனவர்கள் இலங்கை பகுதிகளில் விசைப்படகுகளில் ரோலர்கள் மூலம் மீன்பிடிப்ப தால் பவளப்பாறைகள், கடல் தாவரங்கள் உள்ளிட்டவற்றை அழித்து வருகின்றனர். இதனால் எதிர்கால மீனவ சமூகம் தொடர்ந்து தங்கள் தொழிலை மேற்கொண்டு வாழ்வாதாரங்களை நிலைநிறுத்த முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, விசைப்படகு ரோலர்கள் மூலம் கடல் வளங்களை அழிப்பதை நிறுத்தி, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எதிர்கால மீனவ சமூதாயத்தை வளப்படுத்த வேண்டும்.
நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் பாம்பன் அருளானந்தம்
இலங்கை பகுதிக்கு மீன் பிடிக்க நம் மீனவர்கள் தொடர்ந்து போகக் காரணம் மாற்றுத் தொழில் வசதி இல்லாமையால்தான். வயிற்றுப் பிழைப்புக்காக அடிவாங்கிக் கொண்டும், சித்திரவதைக்கு உட்பட் டும், உயிரே போனாலும் திரும்பத் திரும்ப அங்கேச் செல்கிறார்கள். இந்திய-இலங்கை எல்லை கடல் பகுதியில் நடைபெறும் இத்தகைய பாதிப்புகளுக்கு மீனவர்களை மட்டுமே குறை சொல்லமுடியாது. இதற்கான மாற்றுவழியை ஏற்படுத்தாத அரசுதான் இத்தகைய இழப்புகளுக்கு பொறுப்பு.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago