கடந்த 1998-ல் தமிழகத்தில் மூன்றாவது அணியாக போட்டியிட்ட காங்கிரஸ் இந்தத் தேர்தலில் நான்காவது அணியாக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஓர் அணியாகவும், அதிமுக ஓர் அணியாகவும் போட்டியிட்ட சூழலில் காங்கி ரஸ் கட்சி எம்.ஜி.ஆர். அதிமுக-வுடன் கைகோத்து மூன்றாவது அணியாக 36 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட்டை தொலைத்தது.
இந்தமுறை ஒரு சிறு கட்சிகூட காங்கிரஸுக்கு கைகொடுக்க முன்வராத நிலையில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ்.
தமிழக வரலாற்றில் காங்கிர ஸுக்கு இதுவரை ஏற்படாத பின்னடைவு இது. இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கும் காங்கிரஸ் தலைமை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்கள் இந்தமுறை கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும். போட்டியிடாதவர்கள் கட்சியைவிட்டு ஒதுங்கிவிட வேண்டும் என கண்டிப்புடன் கூறி இருக்கிறது.
இதுகுறித்து ஞானதேசிகன் தரப்பினர் கூறியதாவது: “சிட்டிங் எம்.பி-க்கள் அனைவரும் வரும் தேர்தலில் போட்டியிட்டால்தான் அவரது ஆதரவாளர்கள் களப் பணி செய்வார்கள்.
இதர தொகுதி களிலும் போட்டியிட வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இல்லா விட்டால் தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் இருக்கிறதா என்பதே சந்தேகமாகிவிடும்.
மேலும், இந்த இக்கட்டான சூழலில் முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டால்தான் ஓரளவு ஓட்டுகளை பெற்று காங்கிரஸின் உண்மையான பலத்தை அறிய முடியும்.
காங்கிரஸுக்கு கவுரமான வகையில் ஓட்டு வாங்கிக் காட்டினால்தான் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளிடம் கணிசமான தொகுதிகளை கேட்டுப் பெறமுடியும்’’ என்றனர்.
“பின்னடைவுக்கு காங். தலைமைதான் காரணம்”
அதேவேளையில், காங்கிரஸ் தலைமையின் தவறான அணுகு முறைகளால்தான் தமிழகத்தில் காங்கிரஸுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்லும் வாசன் ஆதரவாளர்களோ, ‘’தொடக்கத்திலிருந்தே வாசனை காங்கிரஸ் மேலிடம் இரண்டாம் இடத்தில்தான் வைத்திருக்கிறது.
2004 தேர்தலில் 23 எம்.எல்.ஏ-க்களை தன்வசம் வைத்திருந்த வாசனுக்கு 4 எம்.பி. சீட்களை ஒதுக்கினர். காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சியை நடத்தி, ஒரே ஒரு எம்.எல்.ஏ.வுடன் திரும்பி வந்த சிதம்பரத்துக்கு மூன்று எம்.பி. சீட்களை ஒதுக்கினர். சமீப காலமாக ராகுல் காந்தி திமுக தலைவரை மதிக்காத போக்கும் காங்கிரஸின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.
எல்லாவற்றையும்விட மிகப் பெரிய தவறு, டெல்லிக்கு தேடிவந்த விஜயகாந்தை தவற விட்டது. அவரை டெல்லிக்கு அனுப்பியதில் வாசனுக்கு பெரும் பங்கு உண்டு. அவர் தனிப்பட்ட முறையில் விஜயகாந்துடன் சில விஷயங்களை பேசி மனதை கரைத்திருந்தார்.
விஜயகாந்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் மனநிலையில் தான் டெல்லிக்கு வந்தார். அப்போதே சோனியா, ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விஜயகாந்துடன் பேசி முடித்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு சரியான மரியாதைகூட டெல்லியில் தரப்படவில்லை. இதனால், தேமுதிக - காங்கிரஸ் கூட்டணி அமையும் வாய்ப்பும் பறிபோனது” என்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago