ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இல்லை: வைகோ

By செய்திப்பிரிவு

ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லாமல், ஆளுநர் உரை ஏமாற்றம் தருகிறது என வைகோ கூறியுள்ளார்.

அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை, அவரது முந்தைய இரண்டு உரைகளின் நகலைப் போல இருக்கிறது. மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக, ஆளுநர் உரையில் தெரிவித்திருப்பது நல்ல நகைச்சுவை. வேலைவாய்ப் புகளை உருவாக்கும் புதிய திட்டங்கள் எதுவும் கடந்த இரண்டரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில் உருவாக்கப்படவில்லை. முன்பு அறிவிக்கப்பட்ட இளைஞர் களுக்கான தொழில் திறன் பயிற்சித் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் நிலைதான் நிலவுகிறது. ஆனால், சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக, ஆளுநர் உரை மூலம் ஜெயலலிதா அரசு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வறட் சியால் பாதிக்கப்பட்டு மக்கள் குடிநீருக்காகத் தவித்துக் கொண் டிருக்கும்போது, உருப்படியான திட்டங்களை முன்வைக்காமல், அம்மா குடிநீர் விநியோகம் பற்றி ஆளுநர் உரையில் பாராட்டி இருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

மணல் தட்டுப்பாட்டின் காரணமாகக் கட்டுமானத் தொழில் முழுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி போராடும் நிலையில், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறித்து, ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்