காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் 6 பேர் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றுள்ளனர்.
சங்க இலக்கிய ஆய்வுகளுக்கு முன்னோடியாகத் திகழும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தமிழகத்தின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. அதுபோல், இந்த பல்கலைக்கழக தமிழ்த் துறை பாரம்பரியமும் பெருமையும் கொண்டது. இங்கு, புகழ் பெற்ற பல பேராசிரியர்கள் பணியாற்றி உள்ளனர். வ.சுப.மாணிக்கம், இரா.சாரங்கபாணி, தேசிகன், தே.சொக்கலிங்கம் போன்ற பேராசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ்ச் செம்மொழி நிறுவனம் ஆண்டுதோறும் செவ்வியல் இலக்கியங்களில் சிறப்பாக ஆய்வு செய்துவரும் இளையவர்களை இனம்கண்டு அவர்களுக்கு செம்மொழி இளம் அறிஞர் என்ற விருதை வழங்கி வருகிறது. இளம் அறிஞருக்கான விருது மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ரூ.1 லட்சம் பரிசுத் தொகை ஆகியன இவ்விருதினுள் அடங்கும்.
ஒவ்வோர் ஆண்டும் 30 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 5 இளம் அறிஞர்களை கண்டறிந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சங்க இலக்கிய ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருந்த அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த் துறையில் பயின்று ஆய்வு செய்த ஆய்வாளர்கள் 6 பேர் இதுவரை இளம் தமிழ் அறிஞர் விருதுகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் முறையே இரா.அற வேந்தன் (2005-06) சே.செந்த மிழ்ப்பாவை (2008-09), சு.முத்தமிழ்ச்செல்வன் (2009-10), சி.சிதம்பரம் (2010-11), க.பாலாஜி (2015-16), மு.முனிஸ்மூர்த்தி (2015-16) ஆவர். இதில் அறவேந்தன், செந்தமிழ்ப்பாவை, முத்தமிழ்ச்செல்வன், சிதம்பரம் இளம் அறிஞர்கள் விருதுகளை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுவிட்டனர். பாலாஜி, முனிஸ் மூர்த்தி ஆகியோர் இந்த விருதுக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விரைவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து இந்த விருது பெற்ற உதவிப் பேராசிரியர் சி.சிதம்பரம் கூறியதாவது:
அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு தற்போது நான் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறேன். அழகப்பா பல்லைக்கழக தமிழ்த் துறை பேராசிரியர்கள் வழங்கிய அடிப்படை தமிழ் கல்வியே இன்று நான் உலகளாவிய தமிழ் ஆராய்ச்சிகளில் ஈடுபட காரணமாக இருந்தது. இளம் தமிழ் அறிஞர் விருது தவிர செம்மொழித் தமிழ்த் திட்டம் சார்பில் தகுதியுள்ள அறிஞர்களுக்கு தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருதுகளும் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியர் விருது அகவையில் மூத்த தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பணிபுரிந்த வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ரூ.5 லட்சம் பரிசுத் தொகை இவ்விருதினுள் அடங்கும்.
குறள்பீட விருது, தமிழுக்காக பணியாற்றிய அயல்நாட்டவர் ஒருவருக்கும், அயல்நாடு வாழ் இந்தியர் ஒருவருக்குமாக இரு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருது குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தின் இந்த விருது எங்களைப்போன்ற இளம் அறிஞர்களை மேலும் ஊக்கமளிப்பதற்கும், தமிழ் மொழியை மேம்படுத்தவும் உதவியாக இருக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago