ஏலச்சீட்டு பிரச்சினைகளால் சீரழியும் ஏழைக் குடும்பங்கள்: ஒழுங்குமுறைகளின் கீழ் கொண்டு வர கோரிக்கை

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி மாவட்டத்தில் ஏலச்சீட்டு விவகாரங்களில் சிக்கி ஏழைக் குடும்பங்கள் சீரழிவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் எளிதில் வறட்சிக்கு ஆளாகும் மாவட்டம். இங்கு சிறந்த மண் வளம் கொண்ட விளைநிலங்கள் இருந்தபோதும் போதிய நீர்வளம் இல்லாததால் விவசாயத்தை இந்த மாவட்டத்தில் ஒரு நிலையான தொழிலாக மேற்கொள்ள முடியவில்லை. மேலும், போதிய வேலை வாய்ப்பு களை வழங்கும் தொழில் நிறுவனங்களும் இங்கு இல்லை. இந்நிலையில் மாவட்ட மக்கள் தொகையில் நான்கில் 3 பங்கு மக்கள் சில மாதங்கள் விவசாயம் செய்தாலும், பெரும்பாலான நாட்களில் உள்ளூர் மட்டுமன்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு கூலி வேலை களுக்கு செல்லும் நிலையில் உள்ளனர். இவ்வாறு கடின உழைப்பால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்ப செலவினங்களை சமாளிக்கின்றனர்.

இதற்கிடையிலும், வருமான த்தில் ஒரு பகுதியை சேமிக்கின்றனர். இந்த சேமிப்பை வங்கிகள் போன்ற அமைப்புகளில் சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட திட்டங்களில் பாதுகாக்கும் அளவிற்கு கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, கிராம மக்களை பொறுத்தவரை இன்றளவும் ஏலச்சீட்டு முறைகளில் சேர்ந்து பணம் செலுத்தி, தேவையானபோது எடுத்துக் கொள்வதையே எளிமை யான நடைமுறையாகக் கருது கின்றனர்.

இந்நிலையில், ஏலச்சீட்டு நடத்தும் முகவரில் தொடங்கி, ஏலச்சீட்டில் சேரும் உறுப்பினர்கள் வரை பல தரப்பினரும் ஏலச்சீட்டு தொடர்பான சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் சம்பந்தப் பட்டவர்களின் குடும்பம் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகிறது. எனவே, ஏலச்சீட்டு நடைமுறைகளை ஒழுங்குமுறைகளின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது:

தருமபுரி மாவட்ட கிராமங்கள் அனைத்திலும் இந்த ஏலச்சீட்டு நடைமுறையில் உள்ளது. ஒருகாலத்தில் குடும்ப பொருளாதாரத்தை சேமிக்கவும், அவசர மற்றும் பெரும் செலவினங்களை சமாளிக்கவும் இந்த ஏலச்சீட்டு மிகச் சிறந்த முறையாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ஏலச்சீட்டிலும் பலவகை மோசடிகளும், முறைகேடுகளும் நடக்கத் தொடங்கி விட்டன. இதில் 3 வகையில் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையில் முகவர் ஏலச்சீட்டு சேர்க்கும் நிலையில், இடையில் உறுப்பினர் களில் ஒருவரோ, சிலரோ உரிய தவணைத் தொகையை பாதியில் கட்டாமல் விடுகி ன்றனர். இருப்பினும் மற்ற உறுப்பினர்களுக்கான முதிர்வுத் தொகையை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு முகவர் ஆளாகிறார். இது முதல் வகை சிக்கல்.

முகவரிடம் ஏலச்சீட்டில் சேரும் உறுப்பினர்கள் முறையாக தவணைகளை செலுத்தி வரும் நிலையில் சில முகவர்கள் திடீரென மொத்தப் பணத்துடன் தலைமறைவாகி விடுகின்றனர். இதனால் மொத்த உறுப்பினர்களும் பணத்தை பறிகொடுத்து தவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இது இரண்டாம் வகை சிக்கல்.

இதுதவிர, சில உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்களுக்கு உத்தரவாதம் அளித்து ஏலச்சீட்டில் சேர்த்து விடுவர். அதுபோன்ற உறுப்பினர்கள் பணம் செலுத்த தவறி தலைமறைவாகி விட்டால், அவருக்கான தவணைத் தொகையை செலுத்துமாறு உத்தரவாதம் அளித்த உறுப்பினர் களுக்கு முகவர்கள் நெருக்கடி தருகின்றனர். இதனால் உத்தரவாதம் அளித்த உறுப்பினர்கள் கடனாளியாகின்றனர். இது 3-ம் வகை சிக்கல்.

இதுபோன்ற பிரச்சினைகளால் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது. ஏலச்சீட்டு விவகாரத்தில் ஏமாந்தோ அல்லது மற்றவர்களுக்காக பணம் செலுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாகி கடனாளியாக மாறியோ தவிக்கின்றனர். அதன் பின்னர் அவர்களின் வருமானத்தின் பெரும் பகுதி இதுபோன்ற பிரச்சினை களாலேயே கரைந்து விடுகிறது.

இதனால் ஏழை, எளிய குடும்பத்தினர், வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே, மோசடிகள், முறைகேடுகள் அரங்கேறாத வகையில் ஏலச்சீட்டு நடைமுறைகளை ஒழுங்கு முறைகளின் கீழ் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்