பேரறிவாளனின் பாட்டி மரணம்: அமைச்சர் அஞ்சலி

By செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனின் பாட்டி கண்ணம்மாள், சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் பேரறிவாளனின் பாட்டி கண்ணம்மாள், சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 98. அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.

இறுதிச் சடங்கில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும்

அதிமுக நிர்வாகிகள் பலர் கண்ணம்மாள் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்