தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் மீனவ சங்கப் பிரநிதிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் விசைப் படகு மீனவப் பிரதிநிதிகளும், நாட்டுப் படகு மீனவப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
தமிழக மீனவர்கள் இதுவரை 256 பேர்கள் இலங்கை சிறைகளில் வாடி வருகின்றனர். மேலும் மீனவர்களின் 81 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீனவப் பிரச்சினை தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜனவரி 2 வியாழக்கிழமை பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டமும், ஜனவரி 9 விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் ஒன்றிணைந்த உண்ணாவிரதப் போராட்டமும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
நமது செய்தியாளரிடம் பேசிய மீனவ சங்க பிரதிநிதி ராயப்பன் கூறியதாவது, ''தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவது தொடர்கதையாக உள்ளது. பலமுறை மத்திய, மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இலங்கை கடற்படையினர் தங்களது நடவடிக்கையை நிறுத்தவில்லை.
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள், படகு மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்து இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வலியுறுத்தி இந்த தொடர் போராட்டங்களை ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் அறிவித்துள்ளோம்.
இதன்பிறகும் அரசாங்கம் காலம் தாழ்த்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் குதிப்போம்'' என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago