மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையால் விவசாயம் கடுமையாக பாதிக்கும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கும் மத்திய அரசின் புதிய முடிவால் விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் குறுகிய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட தவறான முடிவாகும். விவசாயிகளின் விவசாயிகளின் நலனை மிகக்கடுமையாக பாதிக்கக்கூடிய மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மாடுகள் இளம்வயதிலேயே இறைச்சிக்காக விற்கப்படுவதைத் தடுப்பதற்காகத் தான் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. தமிழகத்தில் உள்ளவர்களைப் பொறுத்தவரை அனைத்து வகையான கால்நடைகளையும் கடவுள்களாக மதிப்பவர்கள் ஆவர்.

தாங்கள் வளர்க்கும் மாடுகளை வாழவேண்டிய வயதில் இறைச்சிக்காக விற்பனை செய்யும் எண்ணமும், துணிச்சலும் அவர்களுக்கு வராது. மாடுகள் பால் தரும் அல்லது பயன் தரும் வயதைத் தாண்டிவிட்டால் கூட, அவற்றை தங்களது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாக கருதி சேவை செய்வார்களே தவிர, அவற்றை சுமையாகக் கருதி இறைச்சிக்காக விற்பனை செய்ய மாட்டார்கள்.

அதே நேரத்தில் மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகள் இளம் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை எந்த வகையிலும் தடுக்காது. மாறாக, கண்காணிப்பு என்ற பெயரில் மாடுகளை வைத்துள்ள விவசாயிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அச்சுறுத்தி பணம் பறிக்கவும், பழிவாங்கவும் மட்டுமே பயன்படும்.

விவசாயிகளின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுவது மாடுகள் தான். வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புள்ள உழவர்களுக்கு அத்தகைய தருணங்களில் உதவுவது மாடுகள் தான்.

குழந்தைகளில் கல்வித் தேவை உள்ளிட்ட காரணங்களுக்காக மாடுகளை விற்பனை செய்வதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடையால் உழவர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகும்.

மாடுகளை வளர்ப்பதும், விற்பதும் விவசாயத்தின் ஓர் அங்கம் தான். விவசாயிகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் மாடு வளர்ப்பதையும், விற்பனை செய்வதையும் முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றனர். மத்திய அரசின் தடையால் மாடு வளர்ப்பும், விற்பனையும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். இது விவசாயத்தையும் கடுமையாக பாதிக்கும்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாடுகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பது தான் நோக்கம் என்றால் அதை இந்தியாவில் யாரும் நம்ப மாட்டார்கள். மாடுகளைக் காப்பது தான் நோக்கம் என்றால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதில் மத்திய அரசு அவ்வளவு பிடிவாதம் காட்டியிருக்காது.

இப்போது கூட தமிழகத்திலும், கர்நாடகத்திலும் கடுமையான வறட்சியின் காரணமாக ஆயிரக்கணக்கான மாடுகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் உயிரிழந்து வரும் சூழலில் அதையெல்லாம் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, இப்போது மாடுகளைக் காக்க புதிய விதிகளை வகுத்திருப்பதாகக் கூறுவது விந்தையிலும் விந்தை ஆகும்.

மத்திய அரசு எதற்காக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். இது ஒரு பிரிவினரின் உணவு உரிமையில் தலையிடும் செயலாகும். இன்றைக்கும் ஏழைகளில் பெரும்பான்மையினரின் பொருளாதார நிலைமை மலிவான விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சியை சாப்பிடும் நிலையில் தான் உள்ளது.

இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை தடுக்க நினைப்பது இயற்கை சம நிலையை பாதித்து விடும். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்யும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புதிய விதிகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்