‘தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை’ என்று திமுக தலைவர் அறிவித் திருப்பது தேமுதிக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான் கருணாநிதியின் சூசகமான பேட்டியின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறுகையில், “கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தி.மு.க.வின் இளம் தலைவர், அவர் தயாரித்த சில புள்ளிவிவரங்களை தேர்தல் கணக்குகளை கருணாநிதியை நேரில் சந்தித்து ஒப்படைத்தார் (பார்க்க பெட்டிச் செய்தி). அப்போது அவர் கூறிய சில கருத்துகள் தலைவரின் மனதை வெகுவாக மாற்றின. அவர் கருணாநிதியிடம், ‘கடந்த 35 ஆண்டு கால நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காத எந்த ஒரு கட்சியோ அல்லது மூன்றாவது அணியோ வெற்றி பெற்றதே கிடையாது. குறிப்பாக, ஒரு தொகுதியைகூட வென்றது கிடையாது.
அந்தத் தேர்தல்களில் திராவிடக் கட்சிகளிடம் கூட்டணி வைக்காமல் போட்டியிட்ட முக்கியத் தலைவர்களேகூட டெபாசிட் மட்டுமே பெற முடிந்தது. உதாரணத்துக்கு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 1991 மற்றும் 1996-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் சிவகாசி (அன்று சிவகாசி தொகுதி; தற்போது விருதுநகர்) தருமபுரி, சிதம்பரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வைகோ, வாழப்பாடி ராமமூர்த்தி, பொன் ராதாகிருஷ்ணன், தலித் எழில்மலை, பு.த.இளங்கோவன் ஆகியோரேகூட டெபாசிட் மட்டுமே பெற முடிந்தது. இதுதான் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்த மூன்றாம் அணியின் நிலை.
எனவே, தேமுதிக-வுக்கு திமுக-வை விட்டால் வேறு வழியே இல்லை. ஏனெனில் காங்கிரஸ் கரை ஏறாது என்பதை அவர் நன்றாக அறிவார். ஜெயலலிதாவுடன் பகைத்துக்கொண்ட நிலையில் அதிமுக-வுடன் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. அதனால், தனித்தும் போட்டியிட முடியாது. ஏனெனில் கூட்டணி சேர்ந்த பிறகு மீண்டும் தனித்து நின்றால் சோடை போய்விடுவோம் என்பதை அவர் அறிவார். உதாரணத்துக்கு கடந்த 1996 மற்றும் 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக-வுடன் கூட்டணி வைத்த மூப்பனார் வெற்றி பெற்றார். ஆனால், 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூப்பனார் தனித்து நின்று 6 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற முடிந்தது.
எனவே, திமுக-வுக்கு தேமுதிக தேவை என்பதைவிட தேமுதிக-வுக்கு திமுக தேவை என்பதே உண்மை நிலவரம். அதனால், அவர் இங்கு வந்தாக வேண்டும். அவரைப் பற்றி கவலைப்படாமல் அதேசமயம் அவரைப் பற்றி விமர்சிக்காமல் அடுத்தடுத்த தேர்தல் பணிகளை பார்ப்போம்” என்று அந்த இளம் தலைவர் கருணாநிதியிடம் கூறியுள்ளார். ஆதாரப்பூர்வமான இந்த புள்ளிவிவரங்களும் கருத்துகளும் கருணாநிதிக்கு புது தெம்பை அளித்தன.
அதனால்தான், கடந்த சில மாதங்களாக விஜயகாந்த்தை வெகுவாக புகழ்ந்தும், கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியே என்பது போன்றும் பேட்டி அளித்து வந்த கருணாநிதி, முதல்முறையாக, ‘திமுக, தேமுதிக கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. எனவே, பேச்சுவார்த்தையில் முன்னேற்றமா என்ற கேள்விக்கே இடமில்லை’ என நறுக்கென்று கூறியுள்ளார். திமுக இளம் தலைவரின் கருத்துகளும் புள்ளிவிவர அறிக்கைகளும் தேமுதிக தரப்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரி கிறது. இதன் அடிப்படையில்தான் வெளிநாடு ஒன்றில் விஜயகாந்துடன் திமுக பேச்சுவார்த்தை தொடர விருக்கிறது” என்றார்கள்.
வெற்றிக் கணக்கு
1977 அதிமுக, காங்கிரஸ்
1980 திமுக, காங்கிரஸ்
1984 அதிமுக, இந்திரா காங்.
1989 அதிமுக, காங்கிரஸ்
1991 அதிமுக, காங்கிரஸ்
1996 திமுக, காங்கிரஸ்
1998 அதிமுக, பாஜக
1999 திமுக, பாஜக
2004 திமுக, காங்கிரஸ்
2009 திமுக, காங்கிரஸ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago