இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவித்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், செயலர் ஈஸ்வரனுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து ஈஸ்வரன், கொ.ம.தே.க. துவங்கி பெருந்துறையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தினார்.
அதை முறியடிக்கும்விதமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அதிரடி அறிவிப்பு செய்ததோடு 6 தொகுதிக்கு வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார் பெஸ்ட் ராமசாமி. இதில் அதிருப்தியடைந்த கொ.மு.க.வில் ஒரு பகுதியினர், போர்க்கொடி தூக்கினர். மேலும், மாவட்ட நிர்வாகிகள் திடீர் கூட்டத்தை நடத்தி 51 பேர்கொண்ட தேர்தல் முடிவு எடுக்கும் நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில்தான், பெஸ்ட் ராமசாமி பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக கொ.மு.க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த 10-ம் தேதி கோவை சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற கொ.மு.க மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இக்கட்சி தீர்மான அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி முடிவெடுத்துள்ளதை திருப்பூர் மாவட்டத் தலைவர் சிலீக் ராமசாமி, பொங்கலூர் ஈஸ்வர மூர்த்தி ஆகியோரிடம் பொதுச் செயலாளர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தை முன்னின்று நடத்திய கொ.மு.க மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.நாகராஜிடம் பேசியபோது, ”தலைவரை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முறையாக அழைத்தோம், அவர் வரவில்லை. மாறாக அவரது மகன்கள் மூலமாகதான் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக சொல்லி அனுப்பியிருந்தார், என்னிடமும் தெரிவித்தார். அதை நானும், அவரது மகன்களும் நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்தோம்.
கட்சிக்காகப் பாடுபட்ட அவர் கௌரவத் தலைவராகவாவது கடைசிவரை கட்சியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அவர் அதை ஏற்பதைப் பொறுத்து கட்சியின் முக்கிய முடிவுகளை அடுத்த நிர்வாகிகள் கூட்டம் எடுக்கும்” என்றார். இதுகுறித்து விளக்கம் கேட்க பெஸ்ட் ராமசாமியை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் பலன் ஏதும் இல்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago