கணிதம், அறிவியல் குரூப் பிளஸ் 2 தேர்வு முடிந்தது: மாணவர்கள் உற்சாகம்

By செய்திப்பிரிவு

பிளஸ் 2வில் ஒரு சில குரூப் மாணவர் களுக்கு வியாழக்கிழமை யுடன் தேர்வு முடிவடைந்தது. தேர் வில் காப்பியடித்த 12 மாணவர்கள் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட னர்.

பிளஸ் 2 தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் தேர்வுகள் வியாழக்கிழமை நடந்தன. மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம் ஆகிய படிப்புகளில் சேர முக்கிய பாடங்களான உயிரியல், தாவரவியல் தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

கணிதம், அறிவியல் உள்பட ஒரு சில குரூப் மாணவர்களுக்கான தேர்வு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. அந்த மாணவ, மாணவிகள் கடைசி தேர்வு எழுதிவிட்டு தேர்வு மையத்தில் இருந்து வெளியே வரும்போது உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். விடுமுறையை ஜாலியாகக் கழிக்கப்போவதாக சிலர் கூறினர். அடுத்து நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்க வேண்டும் என்று சிலர் கூறினர்.

பிட் அடித்து 12 பேர் சிக்கினர்

தேர்வு மையத்தில் பிட் அடித்த 12 மாணவர்கள் பறக்கும் படையினரின் திடீர் சோதனை யில் சிக்கினர். உயிரியல் தேர்வில் திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் தலா 3 பேரும், தாவரவியல் தேர்வில் திருவண்ணாமலையில் ஒரு வரும், வரலாறு தேர்வில் திருவண்ணாமலையில் 5 பேரும் (தனித்தேர்வர்கள்) பறக்கும் படையினரிடம் பிடிபட்டதாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவ ராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்