சிவகங்கை மாவட்ட கலைஞர்களுக்கு மதுரையில் ரகசியமாக விருது வழங்கல்

By என்.சன்னாசி

சிவகங்கை மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் தேர்வான கலைஞர்களுக்கு மதுரையில் ரகசியமாக விருதுகள் வழங்கப்பட்டன.

கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்டம் தோறும் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இவ்விருது பெற கலைஞர்களுக்கு சில தகுதிகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் 2010 முதல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், 2015-2016-ம் ஆண்டுக்கான விருதுக்கு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், விருது பட்டியலில் முதலில் தனது பெயர் இடம் பெற்றிருந்ததாகவும், பின்னர் தன் பெயர் நீக்கப்பட்டு, உயரதிகாரிகளுக்கு வேண்டிய ஒருவரை பட்டியலில் சேர்த்துள்ளனர். எனவே அப்பட்டியலை ரத்து செய்து தனது பெயரையும் சேர்க்கக் கோரி சிவகங்கை மாவட்டம், இடையமேலூரைச் சேர்ந்த பா.மேகலாதேவி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நிலுவையில் உள்ளது.

இந் நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி சிவகங்கை மாவட்ட கலை ஞர்களுக்கு விருது வழங்கும் விழாவை கலை பண்பாட்டுத் துறை மதுரையில் நேற்று ரகசியமாக நடத்தியது. இதில் 2010-11, 2011-12, 2012-13-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் மட்டும் அழைக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக இது போன்ற கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மாவட்ட நிர்வாகம் சார்பில், விமரிசையாக நடத்தப்படும். விருது பெறும் கலைஞர்களுக்கு எழுத்து பூர்வமான அழைப்பு அனுப்பப்படும். இவை எதுவுமின்றி கலைஞர்களுக்கு போன் மூலம் மட்டும் அழைத்துள்ளனர்.

இது தொடர்பாக விருது பெற வந்த கலைஞர் ஒருவர் கூறியது:

விருது வழங்குவதை புகைப்படம் எடுக்கக் கூடாது, முகநூலில் பதிவு செய்யக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதித்தனர். எங்கள் பெற்றோர்களைக்கூட அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை. விருது வழங்கும் விழா வெளியே தெரிந்தால் தகுதி இருந்தும், விருதுக்கு தேர்வு செய்யப்படாத பலர் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் இவ்விழா ரகசியமாக நடத்தியதாகவும், இது கலைஞர்களை அவமதிக்கும் செயல் எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இது குறித்து மதுரை கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் சுந்தரிடம் போனில் பேச முயன்றபோது, அவர் பேசுவதை தவிர்த்தார். மற்றொரு அலுவலரிடம் பேசியபோது, உதவி இயக்குநரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி இணைப்பை துண்டித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்