சாதி வன்முறைக்கு இலக்கான திவ்யாவும் கவுசல்யா சங்கரும் சந்தித்த போது..!

By ப.கோலப்பன்

சாதி வன்முறைக்கு இலக்கான கவுசல்யா சங்கர் துயரத்திலிருந்து மீண்டாலும் தன் கணவன் இளவரசனை இழந்த திவ்யா இன்னமும் துக்கத்திலிருந்து மீளவில்லை.

இருவருமே சாதி வன்முறைக்கு இலக்கானவர்கள். இருவருமே தலித் சாதி ஆண்களை திருமணம் செய்து கொண்டதால் சாதி வன்முறையால் குதறி வாழ்க்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டவர்கள். திவ்யாவின் கணவர் ஜூலை 2013-ல் தன் கணவன் இளவரசனை இழந்தார், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. கவுசல்யா சங்கரோ தன் கணவரை தன் கண் முன்னாலேயே கொலை செய்ததைப் பார்த்த பயங்கரத்தை அனுபவித்தவர்.

இந்நிலையில் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று திவ்யாவைச் சந்திக்க தர்மபுரி சென்றார் கவுசல்யா. திவ்யாவை கவுசல்யா ‘காம்ரேட்’ என்றே அழைக்கிறார்.

“பயங்கரமான சம்பவத்திற்கு எதிராக அவரால் (திவ்யா) போராட முடிந்தாலும் அவரால் இன்னமும் பேசமுடியவில்லை” என்று கவுசல்யா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“சில நாட்களுக்கு முன்பாக குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றுவதன் பேரில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக நான் தர்மபுரி சென்றேன். அப்போது திவ்யாவைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது” என்கிறார் கவுசல்யா, இவர் தற்போது சாதியம் மற்றும் கவுரவக் கொலை ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யும் மத்திய அரசு அமைப்பு ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

தன் நண்பர்களை காம்ரேட் என்றே அழைக்கும் கவுசல்யா, திவ்யா பற்றி குறிப்பிடுகையில் திவ்யா கல்லூரிக்குச் சென்று வருவதாகவும் அவருடன் அவர் தாயார் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

“அவர் வேறு எங்கும் செல்வதில்லை, அண்டை வீட்டார் திவ்யாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வருகின்றனர். திலகம் இட்டுக் கொண்டால் இவர் அனைத்தையும் மறந்து விட்டார் என்று அண்டை வீட்டார்களால் கேலி செய்யப்படுகிறார், மிகவும் வலிநிறைந்த கணங்களை திவ்யா வாழ்ந்து வருகிறார்” என்கிறார் கவுசல்யா.

கவுசல்யா ஏற்கெனவே தனது கணவன் சங்கரின் கனவை பூர்த்தி செய்துவிட்டார், அதாவது தன் சொந்த ஊரான குமாரலிங்கத்தில் வீடு ஒன்று கட்டுவது, அவரது இரண்டு இளம் உறவினருக்கு கல்வி வழங்குவது, இரண்டையுமே கவுசல்யா பூர்த்தி செய்துள்ளார்.

கவுசல்யா சங்கர் குறித்து அவரைத் தத்து எடுத்துக் கொண்டுள்ள எவிடென்ஸ் என்ற அமைப்பின் இயக்குநர் கதிர் கூறும்போது, “அநீதிக்கு எதிராக போராடுபவர்களுக்கு கவுசல்யா ஒரு உதாரணமாக திகழ்கிறார். பொதுவாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டோருக்கு மாத பென்ஷனாக ரூ.5000 அளிக்கப்படும். ஆனால் கவுசல்யாவைப் பொறுத்தவரை நாங்கள் அவருக்காக ரூ.11,600 பெறுகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் உள்ளனர், மேலும் இந்த வழக்கை நடத்த அரசே வழக்கறிஞர்கள் குழுவை நியமித்துள்ளது” என்றார்.

திவ்யா பற்றி கவுசல்யா கூறும்போது, வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதே திவ்யாவுக்குத் தெரியவில்லை என்றார்.

நான் அவரிடம் கேட்டேன் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது என்று.. தான் காதலித்த ஒருவரின் நினைவுகளை எளிதில் தன்னால் மறக்க முடியவில்லை என்றார். சிலர் சமூகத்தின் கண்களிலிருந்து அவரை மறைத்து வைத்துள்ளனர்” என்று கவுசல்யா பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்